அயோத்தியில் 11 நாட்களில் 25 லட்சம் பக்தர்கள் தரிசனம்... !
உத்தரபிரதேசத்தின் அயோத்தி நகரில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் ஜனவரி 22ம் தேதி திங்கட்கிழமை நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள் ராமர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் கோவிலில் தினமும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இந்நிலையில் கடந்த 11 நாட்களில் சுமார் 25 லட்சம் பக்தர்கள் கோவிலில் தரிசனம் செய்துள்ளதாக கோவில் அறக்கட்டளை சார்பில் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் பக்தர்களிடம் இருந்து காணிக்கை மற்றும் நன்கொடையாக இதுவரை ரூ.11½ கோடி கிடைத்துள்ளதாகவும் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
கோவிலில் வைக்கப்பட்டுள்ள நன்கொடை பெட்டிகளில் இருந்து ரூ.8 கோடி ரொக்கமாக கிடைத்துள்ளது. காசோலை மட்டும் ஆன்லைன் மூலம் ரூ.3 கோடியே 50 லட்சம் காணிக்கை பெற்றுள்ளதாகவும் அறக்கட்டளை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க