ரயிலின் 25 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து... அதிர்ச்சி வீடியோ!
இந்தியாவில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மதுராவில் நேற்று செப்டம்பர் 18ம் தேதி புதன்கிழமை இரவு சரக்கு ரயிலின் 25 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதனால் அந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
#WATCH | Uttar Pradesh: A goods train derailed in Mathura. Officers from the railway department along with the city police present at the spot. More details awaited. pic.twitter.com/jMuMRX3KUc
— ANI (@ANI) September 18, 2024
ஆக்ரா பிரிவு டிஆர்எம் தேஜ் பிரகாஷ் அகர்வால் “ உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற ஒரு சரக்கு ரயில் புதன்கிழமை இரவு 8.12 மணிக்கு சரக்கு ரயிலின் 25 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
சரக்கு ரயிலின் 25 பெட்டிகள் தடம்புரண்டால் அந்க பகுதியில் 3 ரயில் பாதைகளில் ரயில் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார். இது குறித்த தகவல் அறிந்தும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் மாநகர போலீசார் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டு வேகமாக நடைபெற்று வருகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!