சாலை மறியல்... ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் 239 பேர் கைது!
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழகத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்தப் போவதாக ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் அறிவித்திருந்த நிலையில், விருதுநகரில் இன்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் 239 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு இன்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், விருதுநகரில் இன்று காலை சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அமைப்பின் பொதுச் செயலாளர் வேலுச்சாமி உட்பட 239 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு 108 மாதங்களாக அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உட்பட 2022 டிசம்பர் முதல் நிறுத்தி வைத்திருக்கும் ஓய்வூதியர்களின் பணப்பலன்களை வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!