தொடர் கனமழை... 21 ரயில்கள் ரத்து, 10 ரயில்கள் திருப்பி விடப்பட்டன!

 
ரயில்

 இந்தியாவில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் தொடர்  கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு  ரயில், வாகன போக்குவரத்துகள் முற்றிலும் பாதிப்படைந்து உள்ளது. குறிப்பாக தெலுங்கானாவின் கேசமுத்ரம் மற்றும் மகபூபாபாத் இடையேயான ரயில்வே தண்டவாளத்தில் பாதிப்புக்கள் மிகக்  கடுமையாக உள்ளன.

ரயில்

 இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  சென்னை சென்ட்டிரலில் இருந்து சாப்ரா மற்றும் புதுடெல்லிக்கு சென்று, வர கூடிய ரயில்கள் உட்பட 21 ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன என தெற்கு மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது.  திருப்பதி, மன்னார்குடி, பெங்களூரு  பகுதிகளில் இருந்து புறப்படக்கூடிய ரயில்கள் உட்பட 10 ரயில்கள் வேறு பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டு உள்ளன .

ரயில்

பயணிகளின் தேவை மற்றும் வசதிக்காக ரயில்வே உதவி எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதன்படி ஐதராபாத் 27781500, வாரங்கால் 2782751, காசிபேட் 27782660 மற்றும் கம்மன் 2782885 ஆகிய எண்களை பயணிகள் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web