2023 இந்த 6 ராசிக்காரங்களுக்கு நல்ல நேரம்.. அதிர்ஷ்டத்தைப் பயன்படுத்திக்கோங்க!

 
ராசிபலன் சனி

 புது வருஷத்துல இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும். இந்த வாய்ப்பை சரியா பயன்படுத்திக்கோங்க. இது நாள் வரை உங்களை எதிர்த்தவங்களை மனசுல வைக்காதீங்க. உங்களோட முன்னேற்றத்துல கவனமா இருங்க. ஜோதிட வரலாற்றில் 30 வருடங்களுக்கு பிறகு ஒரு அற்புதம் நிகழ இருக்கிறது. இதனால்  90 சதவீத பேரின் வாழ்க்கை முறை மாறலாம் என ஜோதிட நிபுணர்கள் கணித்துள்ளனர். அதன்படி ஜனவரி 2023ல் சூரியனும், சனியும் ஒரே ராசியில் அதாவது கும்ப ராசியில் வர இருக்கின்றனர். இதனால் 50 சதவீத பேருக்கு சாதகமான சூழ்நிலையும், 50 சதவீத பேருக்கு பாதகமான சூழ்நிலையும் ஏற்படலாம் என்பது  ஜோதிட நிபுணர்கள் கருத்து. மிக அபூர்வமாக இதே போல்  சில சமயங்களில் இரண்டுக்கும் மேற்பட்ட கிரகங்கள் ஒரே ராசியில் வருவதுண்டு.  அந்த வகையில் இந்த  2023 புத்தாண்டில்  சூரியனும், சனியும் ஒரே ராசியில் சஞ்சாரம் செய்கின்றனர்.

ராசிபலன்

ஜோதிட சாஸ்திரத்தின் படி சூரியபகவானின் மகன் தான் சனி. தந்தைக்கும் மகனுக்கும் ஒத்துவராது. பொதுவாக சனி ஒரு ராசியில் நுழைந்தவுடன் அவரவர் கர்மவினைக்கேற்ப பலன்களைத் தருவார்.ஆனால் கிரகங்களின் அதிபதியான சூரியன் ஒரு ராசிக்குள் நுழைந்துவிட்டால்  மரியாதை, வெற்றி, ஆரோக்கியம் மற்றும் செல்வசெழிப்பை கொண்டு வந்து சேர்க்கும். ஆனால் 2 ராசிகளும் ஒரே நேரத்தில் வந்தால் என்ன கிடைக்கும்? என்ன இழப்பு? இதனால் பெரும் ஏற்ற இறக்கம் ஏற்படலாம். 2023ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் கூடும் போது யாருக்கு சாதகமாகவும், யாருக்கெல்லாம் பாதகமாகவும் இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

கும்ப ராசிக்கு அதிபதி சனி. தகப்பனும், மகனும் ஒரே இடத்தில் அதாவது சூரியனும் சனியும் கும்ப ராசியில் இணைய உள்ளனர். ஜனவரி 17, 2023, செவ்வாய்கிழமையில் சனி கும்பராசியில் பிரவேசிக்கிறார். அதே போல் பிப்ரவரி 13, 2023 திங்கட்கிழமை சூரியன் பிரவேசிக்கிறார். மார்ச் 14 வரை இந்த நிலை நீடிக்கும். இதன் படி சரியாக ஒரு மாத காலம் கும்பத்தில் சனியும் சூரியனும் ஒன்றாக இருப்பர். இதனால் இந்த காலகட்டம் ஒரு  சிலருக்கு மிகவும் சாதகமாகவும், சிலருக்கு மிகவும் கடினமானதாகவும் இருக்கும்.

ராசிபலன்
இந்த நிகழ்வால்  6 ராசியினர் சிறப்பான பலன்களை பெறுகிறார்கள். அதன்படி  ரிஷபம், மிதுனம்,கன்னி, மகரம், தனுசு மற்றும் கும்பம் ஆகிய 6 ராசிகளுக்கு மிகமிக சாதகமான காலகட்டம். இந்த ராசிக்காரர்களுக்கு எடுத்த காரியத்தில் வெற்றி,நிலையான  செல்வம் மற்றும் பூரண மகிழ்ச்சியும் கிட்டப்போகிறது. அத்துடன் அவர்களுக்கு செல்லும் இடத்தில் எல்லாம் மரியாதை, பேர், புகழ் கிடைத்து விடும். எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவது நிச்சயம். இதனால் இவர்கள் நல்ல சிந்தனைகளை வளர்த்து கொள்வது நன்மை தரும். மற்ற ராசிக்கக்காரர்களுக்கு  சவாலான காலகட்டம் .அவர்கள் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது உத்தமம். தெய்வ வழிபாட்டின் மூலம் அனுகூலமான பலன்களை பெறலாம் என்கின்றனர் ஜோதிட நிபுணர்கள். 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web