தமிழகத்தில் இன்று 20,000 ஆயிரம் மையங்களில் மெகா தடுப்பூசி முகாம்!

தமிழகத்தில் இன்று 20,000 ஆயிரம் மையங்களில் மெகா தடுப்பூசி முகாம்!

தமிழகம் முழுவதும் இன்று 20,000 மையங்களில் தடுப்பூசி முகாம் செயல்படவிருக்கிறது. இன்று சுமார் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் கொரோனா 2வது அலை பெரும்பாலான பகுதிகளில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 3வது அலை அச்சம் காரணமாகவும், மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக்கப்பட்டு வருகின்றன .

தமிழகத்தில் இன்று 20,000 ஆயிரம் மையங்களில் மெகா தடுப்பூசி முகாம்!

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இன்று மீண்டும் சென்னையில் மெகா தடுப்பூசி முகாம் சென்னையில் நடைபெறுகிறது.இந்த முகாமில், 2வது டோஸ்கள் மட்டுமே போடப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 20,000 ஆயிரம் மையங்களில் மெகா தடுப்பூசி முகாம்!

செப்டம்பர் 12ம் தேதி மாநிலம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.அதில் மாநிலம் முழுவதும் சுமார் 40000க்கு மேற்பட்ட முகாம்களும், சென்னையில் மட்டும் 1600 முகாம்களும் நடத்தப்பட்டன. இந்த முகாம்கள் மூலம் ஒரே நாளில் தமிழகம் முழுவதும் சுமார் 28.91 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று 20,000 ஆயிரம் மையங்களில் மெகா தடுப்பூசி முகாம்!

அந்த வகையில் இன்று மீண்டும் ஒரு மெகா தடுப்பூசி முகாமை நடத்த தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. அதன்படி, சென்னையில் நடத்தப்படும் 1600 தடுப்பூசி முகாம்களில் கோவாக்சின், கோவிஷீல்டு 2வது டோஸ் தடுப்பூசிகள் மட்டுமே செலுத்தப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web