20 புல்லட், 40 ஆக்டிவா, 30 பல்சர் பைக்குகள்... சாவியே இல்லாமல் திருடிய பலே கில்லாடி!

ஆந்திரா மாநிலம் பெங்களூருவில் வசித்து வருபவர் பிரசாந்த். இவர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து கொண்டே அத்துடன் மெக்கானிக் தொழிலும் செய்து வருகிறார். இந்நிலையில் இவர் பைக் மற்றும் ஸ்கூட்டி போன்ற வாகனங்களை மர்மமான முறையில் திருடி வந்ததும் தெரிய வந்துள்ளது. சுமார் 3 வருடங்களாக இவர் வாகனங்களை திருடிவந்த நிலையில் தற்போது தான் பெங்களூரு காவல்துறையினரிடம் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த வகையில் இவரிடமிருந்து திருட்டு 20 ராயல் என்ஃபீல்டுகள், 40 ஆக்டிவா ஸ்கூட்டர்கள், 30 பல்சர் பைக்குகளை காவல்துறையினர் கைப்பற்றினர்.காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திய நிலையில் அவர்களிடம் 2 லட்சம் மதிப்புள்ள என்ஃபீல்டு புல்லட்டை சாவி இல்லாமல் சாதாரணமாக லாக்கை உடைத்து திருடுவதை அவர்கள் முன்னிலையில் பிரசாந்த் செய்து காட்டியுள்ளார்.
அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பைக்குகளில் 12 பைக்குகள் தமிழ்நாட்டை சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை பெங்களூரு காவல்துறையினர் தமிழ்நாடு காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். தொடர்ந்து 3 வருடங்களாக திருடி வந்த திருடன் தற்போது அகப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதிவாசிகளிடையே பெரும் பேசுபொருளாகியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!