பள்ளி பேருந்து விபத்தில் 2 மாணவர்கள் பலி; 3 மாணவர்கள் கை கால்களை இழந்த துயரம்!

 
பள்ளிப்பேருந்து

 இந்தியாவில் கர்நாடகா  மாநிலம், ரெய்ச்சூரில் 40 மாணவர்களை ஏற்றிச் சென்ற பள்ளி பேருந்து விபத்திற்குள்ளானதில் 2 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 3 மாணவர்கள் இந்த விபத்தில் தங்கள் கை, கால்களை இழந்தனர். கர்நாடகா மாநிலம் ரெய்ச்சூர் மாவட்டத்தில் லயோலா பள்ளி பேருந்து, கர்நாடக மாநில அரசு பேருந்தின் (KSRTC) மீது மோதி விபத்திற்குள்ளனாது. இந்த விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் மூவர் கைகால்களை இழந்தனர் .

பள்ளிப்பேருந்து

ரெய்ச்சூர் மாவட்ட ஆணையர் நித்தேஷ் இந்த விபத்து குறித்து கூறுகையில், விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.3 லட்சமும் கேஎஸ்ஆர்டிசி போக்குவரத்து கழகம் இழப்பீடு அறிவித்துள்ளது.இந்த விபத்தில் காயமடைந்த மாணவர்களில் 17 மாணவர்கள் தனியார் மருத்துவமனையில், 23 மாணவர்கள் மான்வி தாலுகாவில் உள்ள மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

"லயோலா பள்ளி பேருந்து திடீரென சாலையில் இருந்த பள்ளங்களால் தனது பாதையை மாற்றியது, இதன் காரணமாக பேருந்தின் பின்னால் வந்து கொண்டிருந்த KSRTC பேருந்து மீது மோதி விபத்திற்குள்ளானது. விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஆபத்தானது" என்று போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஏடிஜிபி அலோக் குமார்  கூறினார்.விபத்தில் உயிரிழந்த குழந்தைகள் நித்திய சாந்தி அடைய வேண்டும் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

பள்ளிப்பேருந்து

இது குறித்து பகிர்ந்துள்ள அவர், "ரெய்ச்சூர் மாவட்டத்தில் மான்வி தாலுகாவில் கப்கல் அருகே பள்ளி பேருந்து மற்றும் போக்குவரத்து பேருந்து மோதிய பயங்கர சாலை விபத்து பற்றி அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன்" என்று பதிவிட்டுள்ளார்.விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்கு அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்திய பொம்மை, காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்க வேண்டும் என்றார்.

From around the web