அதிர்ச்சி... என்கவுன்ட்டரில் 2 ராணுவ அதிகாரிகள், டிஎஸ்பி வீர மரணம்!!
ஜம்மு காஷ்மீரில் கரோல் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல் துறை இணைந்து செப்டம்பர் 12 -13 இரவுகளில் அப்பகுதியில் கூட்டு நடவடிக்கையைத் தொடங்கியது.அந்த சமயத்தில் ராணுவத்திற்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த சண்டையில் இந்தியாவின் மேஜர் ஆஷிஷ் தோன்சாக் மற்றும் கர்னல் மன்பிரீத் சிங், டிஎஸ்பி ஹுமாயுன் பட் ஆகியோர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
On behalf of the J&K Police Pariwar DGP J&K Sh Dilbag Singh has condoled the martyrdom of the braveheart officers of J&K Police and Army in an encounter at Gadool,Kokernag,Anantnag.
— J&K Police (@JmuKmrPolice) September 13, 2023
The DGP has said in his message that he is deeply saddened by the terrible loss of three young… pic.twitter.com/pMJSwYE8wX
இந்த தாக்குதலில் ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டர் ஜெனரல் குலாம் ஹசன் பட்டின் மகனான டிஎஸ்பி ஹுமாயுன் பட் குண்டு பாய்ந்து அதிக இரத்த இழப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு மனைவியும், 2 மாத பெண் குழந்தையும் உள்ளனர். பயங்கரவாதிகளுக்கு எதிரான போராட்டம் தற்போதும் நடைபெற்று வருகிறது.
படுகாயம் அடைந்த வீரர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு வசதியாக ராணுவம் ஹெலிகாப்டர்களில் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது. காவல்துறை தலைமை இயக்குனர் , கூடுதல் காவல்துறை தலைமை இயக்குனர் , மற்றும் 15 வது படையின் தளபதியும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். இதன் காரணமாக அனந்த் நாக் மாவட்டத்தில் பரபரப்பு நிலவி வருகிறது. இந்திய ராணுவம் மீது தடை செய்யப்பட்ட எதிர்ப்பு முன்னணி நிழல் குழு தாக்குதல் நடத்தியதற்கு பொறுப்பேற்றுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!