மிஸ் யுனிவர்ஸ் இந்தியா பட்டம் வென்றார் 18 வயது இளம்பெண் ரியா சிங்கா!
மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024 பட்டம் வென்றார் 18 வயதான இளம்பெண் ரியா சிங்கா. அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நேற்று மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024 இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் இந்தியாவும், நடிகையுமான ஊர்வசி ரவுதெலா, நிகில் ஆனந்த், வியட்நாம் திரைப் பிரபலம் குயங் க்வின் உள்ளிட்டோர் நடுவர்களாக கலந்து கொண்டனர்
51 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த இறுதிப் போட்டியில் குஜராத்தைச் சேர்ந்த ரியா சிங்கா, 2024ம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் இந்தியாவாக மகுடம் சூட்டப்பட்டார்.
முதல் ரன்னர் அப் இடத்தை பிரஞ்சல் பிரியா, 2வது ரன்னர் அப் இடத்தை சாவி வெர்ஜ், 3வது ரன்னர் அப் இடத்தை சுஷ்மிதா ராய், 4வது இடத்தை ரூஃபுஸானோ விஸோ ஆகியோர் பிடித்தனர்.
மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024 பட்டத்தை வென்றதை அடுத்து வரும் நவம்பர் மாதம் மெக்சிகோவில் நடைபெற உள்ள மிஸ் யுனிவர்ஸ் 2024 போட்டியில் இந்தியா சார்பில் ரியா சிங்க கலந்துக் கொள்கிறார்.
மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024 பட்டத்தை வென்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய சிங்கா, “நான் மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024 பட்டத்தை வென்றிருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணம். இந்த பட்டத்துக்கு என்னை தகுதிப்படுத்திக் கொள்ள நான் நிறைய உழைப்பைச் செலுத்தியுள்ளேன். இதற்கு முன் இந்தப் பட்டத்தை வென்றவர்களிடமிருந்து நான் எனக்கான உந்துதலைப் பெற்றேன்” என்று தெரிவித்தார்.
நடுவர்களில் ஒருவரான நடிகையும், முன்னாள் மிஸ் யூனிவர்ஸ் பட்டம் வென்றவருமான ஊர்வசி ரவுதெலா கூறுகையில், “மிஸ் யுனிவர்ஸ் 2024 பட்டத்தை இந்தமுறை இந்தியா வெல்லும் என நான் நம்புகிறேன். இங்கே பங்கேற்ற அழகிகள் அனைவரும் திறமையானவர்கள். இந்தத் திறமை இந்தியாவுக்கு வெற்றி பெற்றுத் தரும்” என்றார்
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!