18 ரயில்கள் ரத்து... பயணிகள் கடும் அவதி.....!!

 
ரயில்

நேற்று அக்டோபர் 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் ஹவுரா-சென்னை வழித்தடத்தில் விசாகப்பட்டினம் மற்றும் பலாசா இடையே 2  பயணிகள் ரயில்கள் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 பெட்டிகள் தடம் புரண்டன.இந்த கோர  விபத்தில் நேற்றுவரை 9 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டு இருந்த நிலையில், தற்போது  பலி எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது.  50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில்   மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இந்நிலையில், இந்த விபத்தால் இதுவரை 18 ரயில்கள் முழுமையான ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.  அதே நேரத்தில்   22 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரயில் சிக்னல் இல்லாததன் காரணமாக அலமண்டா மற்றும் கண்டகப்பள்ளி ரயிலானது தண்டவாளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு  இருந்தது.   அப்போது விசாகப்பட்டினம் – ராய்காட் பயணிகள் ரயில் பின்னால் இருந்து மோதியது குறிப்பிடத்தக்கது.

விபத்து குறித்த தகவல் அறிந்து ரயில்வே போலீஸார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். விபத்தில் ரயில் பெட்டிகள் தடம் புரண்டதால், மின்சார கம்பங்கள் சேதமடைந்து அந்த பகுதி முழுக்க மின்சாரம் தடைப்பட்டதால் மீட்பு பணிகள் தாமதமானது.

ரயில்வே போலீசாருடன், தீயணைப்பு வீரர்களும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு, காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் 3 பேர் பலியானதாக முதலில் கூறப்பட்ட நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து பலர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

ரயில் விபத்தை தொடர்ந்து மீட்பு பணிகளை வேகமாக மேற்கொள்ள உத்தரவிட்டுள்ள ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000மும் நிவாரண தொகையாக அறிவித்துள்ளார்.

 

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web