குழந்தை திருமணத்தால் 17 வயது சிறுமி கர்ப்பம்... கணவர் மீது பாய்ந்த போக்சோ !

 
குழந்தை திருமணம்

 கோவை மாவட்டம் சிறுமுகை பகுதியில் வசித்து வருபவர்  17 வயது சிறுமி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 25 வயது வாலிபருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 

7 ஆம் வகுப்பு மாணவி கர்ப்பம்

தற்போது அந்த சிறுமி கர்ப்பம் அடைந்து இருப்பதாக தெரிகிறது.  மருத்துவ பரிசோதனைக்காக அவளை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவளுக்கு 17 வயதே ஆவது குறித்து மருத்துவர்களுக்கு  தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் உடனடியாக கோவை மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

சிறுமி கர்ப்பம்

அதன்பேரில் நேரில் சென்று விசாரித்த குழந்தைகள் நல அதிகாரிகள் மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல்  நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் சிறுமியின் கணவரான இளைஞர்   மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web