17 வயது சிறுமி கர்ப்பம்.. கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்ட சித்தப்பா போக்சோவில் கைது..!
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கூலி தொழிலாளி செய்து வருபவர் கருப்பு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவரது மகளுக்கு 17 வயது. இந்நிலையில் இவரது மகள் திருத்தணி முருகன் கோவிலுக்கு சென்று விட்டு வருவதாக கூறிவிட்டு திரும்பி வரவில்லை. இதைத் தொடர்ந்து, உறவினர்கள் வீடு மற்றும் பிற இடங்களில் தேடினர், ஆனால் 17 வயது சிறுமியைக் காணவில்லை, சிறுமியின் தாயார் திருத்தணி காவல் நிலையத்தில் செப்டம்பர் 2023 இல் புகார் அளித்தார்.
இந்த புகாரை பதிவு செய்த போலீசார் இளம்பெண்ணை காணவில்லை என வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். அந்த இளம்பெண் ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்படி திருத்தணி போலீசார் அப்பகுதிக்கு சென்று இளம்பெண்ணுடன் இருந்த வாலிபரை பிடித்தனர். திருத்தணி போலீசார் விசாரித்தபோது, திருத்தணி அருகே உள்ள வி.கே.என்.கண்டிகை பகுதியை சேர்ந்த பாலாஜி (29) என்ற வாலிபர், 17 வயது சிறுமியின் சித்தப்பா முறை என்பதும், என்னை அவர் காதலிப்பதாகவும் கூறி அழைத்து சென்றதாகவும் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பள்ளிப்பட்டு வட்டம் கரிபேடு முருகன் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டு ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியில் தனியாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியதாகவும், பாலாஜி தன்னுடன் பலவந்தமாக பாலுறவு நடத்தியதாக 17 வயது சிறுமி போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். இதன் காரணமாக, அவர் 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.இதையடுத்து இளம்பெண்ணை கடத்தி பிளாக்மெயில் செய்து கர்ப்பமாக்கியதாக போலீசார் வழக்கு பதிவு செய்து பாலாஜியை பிடித்து போக்சோ வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க