தென்மாவட்டங்களுக்கு 16,540 சிறப்புப் பேருந்துகள் !

 
தென்மாவட்டங்களுக்கு 16,540 சிறப்புப் பேருந்துகள் !

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை நவம்பர் 4 ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து பலரும் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். மக்களின் தேவைகளின் அடிப்படையில் தீபாவளிக்காக சென்னையில் இருந்து 16,540 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்துத் துறைதெரிவித்துள்ளது.

தென்மாவட்டங்களுக்கு 16,540 சிறப்புப் பேருந்துகள் !

இது குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் விடுத்த செய்திக்குறிப்பில் “தீபாவளிப் பண்டிகை நவம்பர் 4ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, நவம்பர் 01/11/2021 முதல் 03/11/2021 வரையில், வழக்கமான 2,100 பேருந்துகளுடன், 3,506 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

தென்மாவட்டங்களுக்கு 16,540 சிறப்புப் பேருந்துகள் !

3 நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக, சென்னையிலிருந்து மட்டும் சுமார் 9,806 பேருந்துகள் இயக்கப்படும். தமிழகத்தின் மற்ற ஊர்களிலிருந்து 3 நாட்களுக்கு 6,734 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
தீபாவளிப் பண்டிகைக்கு பிறகு பணிபுரியும் இடங்களுக்கு திரும்ப தமிழகத்தின் மற்ற ஊர்களிலிருந்து சென்னைக்கு பேருந்துகள் இயக்கப்படும்.

தென்மாவட்டங்களுக்கு 16,540 சிறப்புப் பேருந்துகள் !

இந்த பேருந்துகள் நவம்பர் 5 முதல் நவம்பர் 8 வரை வழக்கமான 2,100 பேருந்துகளுடன், 4,319 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். மற்ற ஊர்களுக்கு 5,000 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 17,719 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. மக்களின் தேவைகளை பொறுத்து கூடுதல் பேருந்துகளை இயக்கவும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

From around the web