அதிர்ச்சி... 11.5 கோடி பான் கார்டுகள் முடக்கம்...!!
இந்திய குடிமகன் அடையாள அட்டையாக ஆதார் இருந்து வருகிறது.இதனுடன் நிரந்தர கணக்கு எண் எனப்படும் பான் (PAN) எண்ணை வருமான வரித்துறை நீண்ட காலமாக அறிவுறுத்தி வந்தது. இந்தியாவில் வருமானம் பெரும் அனைவருக்கும் இந்த பான் எண் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் நடைபெறும் வரி எய்ப்பு, மோசடி பணப் பரிவர்த்தனை போன்ற நிதி களை தவிர்க்க மக்கள் அனைவரும் பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை தொடர்ந்து வேண்டுகோள் விடுத்திருந்தது.
இதற்கான காலக்கெடு அடுத்தடுத்து நீடிக்கப்பட்டு வந்த நிலையில் கடைசியாக 30 ஜூன் 2023 க்கு முன் தங்கள் பான் எண்ணை, ஆதாருடன் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. ஜூலை 1 - 2023 முதல், இணைக்கப்படாத பான் எண் செயலிழக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், ஆதாருடன் இணைக்காத 11.5 கோடி பான் கார்டுகள் முடக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் ஆதாருடன் இணைக்காததால் பான் கார்டுகளை முடக்கி மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பதில் அளித்துள்ள மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம், ஆதாருடன் பான் கார்டுகளை இணைக்க தேவையான கால அவகாசம் அளிக்கப்பட்டது. பான்-ஆதார் இணைப்புக்கான கெடு 2023, ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், இந்தியா முழுவதும் 57.25 கோடி பேரின் பான் கார்டுகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன. காலக்கெடுவை பல முறை நீட்டித்தும், பான் கார்டுகளை ஆதாருடன் இணைக்காத 11.50 கோடி பான் கார்டுகள் முடக்கப்பட்டு விட்டன. இதனால் இந்த பான் கார்டுகளை நிரந்தரமாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!