மெகா சான்ஸ்... இந்தியன் ரயில்வேயில் 11,558 பணியிடங்கள்... உடனே அப்ளை பண்ணுங்க!

 
ரயில்
 


 மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும்  இந்தியன் ரயில்வேயில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது 
ரயில்வேயில் என்டிசிபி- பிரிவில் 11,558 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? வயது வரம்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.  

ரயில்

பணியிடங்கள்  
1. Chief கமர்ஷியல் - டிக்கெட் மேற்பார்வையாளர் - 1,736 பணியிடங்கள்
2. ஸ்டேஷன் மாஸ்டர் - 994
3. சரக்கு ரயில் மேலாளர் - 3,144
4. ஜூனியர் அக்கவுண்ட் அசிஸ்டென்ட் - டைப்பிஸ்ட் - 1,507
5. சீனியர் கிளார்க் - டைப்பிஸ்ட் - 732
6. கமர்ஷியல் - டிக்கெட் கிளார்க் - 2,022
7. கணக்கு எழுத்தர் - தட்டச்சர் - 361
8. ஜூனியர் கிளார்க் - தட்டச்சர் - 990
9. ரயில்கள் கிளார்க் - 72
 மொத்தம் 9 வகையான பணியிடங்களில் 11,558 பேர் தேர்வு செய்யப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  
கல்வி தகுதி: வணிக தலைமை - டிக்கெட் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், சரக்கு ரயில் மேனேஜர், ஜூனியர் அக்கவுண்டண்ட் அஸ்சிஸ்டண்ட் டைபிஸ்ட் , சீனியர் கிளர்க்  பணியிடங்களுக்கு ஏதாவது ஒரு டிகிரி முடித்து இருக்க வேண்டும். சீனியர் கிளர்க், கமர்ஷியல், அக்கவுண்ட்ஸ் கிளர்க், ஜூனியர் கிளர்க், ரயில் கிளர்க்  பணியிடங்களுக்கு 12ம் வகுப்பு தேர்ச்சியும்,  டைப்பிஸ்ட் பணிக்கு தட்டச்சு திறனும் முக்கியம்.  
வயது வரம்பு: 
டிகிரி  தகுதி கொண்ட பணியிடங்களுக்கு  18  முதல் 36 வயது  
12ம் வகுப்பு  தகுதி கொண்ட பணியிடங்களுக்கு  வயது   33 
எஸ்.சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வுகள் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் முன்பதிவு

மாதச் சம்பளம்  :
Chief கமர்ஷியல் - டிக்கெட் மேற்பார்வையாளர் : மாதம் ரூ. 35,400/-
ஸ்டேஷன் மாஸ்டர் - மாதம் ரூ. 35,400/-
சீனியர்கிளர்க் - மாதம் ரூ. 29,200/-
கமர்ஷியல் டிக்கெட் கிளர்க் - மாதம் 21,700/-
இதர பணியிடங்களுக்கு மாதம் ரூ.19,900 வழங்கப்படும்.
தேர்வு முறை: சிபிடி எனப்படும் கணிணி வழிதேர்வு 2 கட்டமாக நடத்தப்படும்.  டைப்பிங் பணிகளுக்கு டைப்பிங் திறன் தேர்வு உண்டு. எழுத்து தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு / மருத்துவ பரிசோதனைக்கு அழைக்கப்படுவார்கள்.  நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைபெறும்.
விண்ணப்ப கட்டணம்:  
விண்ணப்ப கட்டணம் ரூ.500/-  தேர்வு எழுதிய பிறகு ரூ.400 திருப்பி அளிக்கப்படும். பெண்கள், எஸ்சி/எஸ்டி, மாற்றுத்திறனாளிகள்  பிரிவினருக்கு ரூ.250 திருப்பி அளிக்கப்படும். ஆன்லைன் மூலம் மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும். 
விண்ணப்பிக்கும் முறை :
ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.  விண்ணப்பிக்க அவகாசம் வரும் 14-09-2024 அன்று தொடங்குகிறது. 
விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.10.2024  
12 ம் வகுப்பு தகுதி கொண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அவகாசம் 21.09.2024  டிகிரி தகுதி கொண்ட பணியிடங்களுக்கு 26.10.2024 அன்று விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும். தேர்வு அறிவிப்பு பற்றிய ஷார்ட் நோட்டீஸ் தற்போது வெளியாகியுள்ளது.  விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ரயில்வே தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web