தொடர் கனமழை... மண் சரிவில் சிக்கி 11 பேர் பலி... பெரும் சோகம்!

 
சீன மழை
 

சீனாவின் கிழக்குப் பகுதி முழுவதிலும் கேமி புயலால் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. தென்கிழக்கு பகுதியில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

 மழை

ஹுனான் மாகாணத்தில் உள்ள ஹெங்யாங் நகரில் ஒரு வீட்டில் மண்சரிவு ஏற்பட்டது. இதில் 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 பேர் பலத்த காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கனமழையால் மலைப்பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால், மண்சரிவு ஏற்பட்டுள்ளது. 
 
ஷாங்காய் நகரில் டெலிவரி பாய் மீது மரம் விழுந்தது இதில் அவர் உயிரிழந்தார். கேமி புயல் சீனாவை அடைவதற்கு முன்பு பிலிப்பைன்சில் பெய்த கனமழையால் 34 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web