செம... 1000 பேருக்கு அம்மன் கோயில்களுக்கு கட்டணமின்றி ஆன்மிகப் பயணம்!

 
அம்மன்

 ஆனி மாதம் முடிவடைய இன்னும் சில நாட்களே உள்ளன. ஜூலை 17ம் தேதி ஆடி மாதம் பிறக்க உள்ள நிலையில் தமிழக அரசு அசத்தல் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வகையில் மூத்த குடிமக்களை தமிழகம் முழுவதும்  புகழ்பெற்ற அம்மன் கோயில்களுக்கு   கட்டணமில்லாமல் அழைத்துச் செல்லும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கோவில் பணியாளர்களுக்கு ரூ.5,000/ ஊக்கத்தொகை ! சேகர் பாபு அதிரடி!

அதன்படி  60 வயது முதல் 70 வயதுக்குட்பட்ட 1000 பக்தர்கள் அழைத்துச் செல்ல தமிழ்நாடு அரசு ரூ.50 லட்சம் ஒதுக்கியுள்ளது. அம்மன் திருகோயில்களுக்கு ஆடி மாதத்தில் 1000 மூத்த குடிமக்கள் கட்டணமின்றி ஆன்மிக பயணம் செல்ல உள்ளனர். சென்னை, தஞ்சை, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை மண்டலங்களில் இருந்து   அம்மன் கோயில்களுக்கு செல்லும் பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது.  

கோவில் சேகர்பாபு

ஜூலை 19, 26, ஆக.8, 9 ஆகிய 4 நாட்களில் அந்தந்த மண்டலங்களில் இத்திட்டம் தொடங்கப்பட உள்ளன. ஆன்மிக பயணம் வர தகுதியும், விருப்பமும் உடையவர்களின்  விண்ணப்பங்களை 17-ம் தேதிக்குள் இணை ஆணையர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை  www.hrce.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ அறநிலையத்துறை இணையதளத்தின் மூலம்    பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத்  தெரிவிக்கபப்ட்டுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web