நெஞ்சை உறைய வைக்கும் காட்சிகள்... மதுபாரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலி... 7 பேர் படுகாயம்!
மெக்சிகோ நாட்டில் மத்திய மெக்சிகோவில் குரேடரோவில் அமைந்துள்ள மதுக்கடை பாரில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலியாகியுள்ளனர். நேற்று நவம்பர் 10ம் தேதி சனிக்கிழமை மதுக்கடை பாரில், நான்கு பேர் கொண்ட குழு உள்ளே நுழைந்தது.
🔴 #URGENTE | ¡Masacre en Querétaro!
— Diario Cambio (@Diario_Cambio) November 10, 2024
Un grupo armado ingresó al restaurante “Los Cantaritos” en el centro de Querétaro, dejando al menos diez personas sin vida —siete hombres y tres mujeres— y nueve más heridas.
🎥 RRSS#diariocambio pic.twitter.com/7B0XXxdwgJ
அவர்கள் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இதனையடுத்து அந்த கும்பல் காரில் தப்பிச் சென்றது. இச்சம்பவத்தில் 10 பேர் பலியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர். நகரின் பொதுப் பாதுகாப்புத் தலைவரான ஜுவான் லூயிஸ், இந்தத் தாக்குதலையும், பலியானவர்களின் எண்ணிக்கையையும் உறுதிப்படுத்தியுள்ளார்.
தாக்குதலைத் தொடர்ந்து ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகக் கூறினார். தாக்குதலுக்கு சில மணி நேரங்களுக்குப் பிறகு, குரேடரோவின் ஆளுநர் மொரிசியோ குரி தனது எக்ஸ் தளத்தில், தாக்குதல் நடத்தியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவர் என உறுதியளித்தார்.
மேலும் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கவும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் கூறியுள்ளார்.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!