பெரும் சோகம்... பள்ளிப்பேருந்து கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதி 11 மாணவர்கள் பலி!

 
இந்தோனேஷியா

 இந்தோனேசியாவில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து  கோர விபத்தில் சிக்கியுள்ளது.இந்த விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 12க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் .இது குறித்து வெளியான செய்திக்குறிப்பில் மே 11ம் தேதி சனிக்கிழமை மாலை 6:48 மணிக்கு   ஜாவா தீவு நகரமான டெபோக்கில் இருந்து பிரபலமான சுற்றுலாத் தலமான லெம்பாங்கிற்கு 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஏற்றிக் கொண்டு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.  இந்தப்பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து இடதுபுறமாகச் சாய்ந்து கார் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியது.  இந்த விபத்தில் 8 மாணவர்கள்  ஒரு ஆசிரியர் உயிரிழந்தார்.  

இந்தோனேஷியா
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன், 13 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 40 பேருக்கு சிறுசிறு காயங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.   இந்தோனேசியாவில் கொடிய போக்குவரத்து விபத்துக்கள் பொதுவானவை. அந்நாட்டில் பள்ளி  வாகனங்கள் பெரும்பாலும் பழையவை அல்லது மோசமாகப் பராமரிக்கப்படுவதாகவும்,  சாலை விதிகள் வழக்கமாகப் புறக்கணிக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  இதே போல் கடந்த மாதம், மேற்கு ஜாவாவில் இஸ்லாமிய புனித மாதமான ரம்ஜானின் இறுதியில் ஈத்-அல்-பித்ரைக் கொண்டாட மக்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, ​​​​ஒரு கார் பேருந்து மற்றும் மற்றொரு கார் மீது மோதியதில் குறைந்தது 12 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.   

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web