தமிழகத்தின் 9 துறைமுகங்களிலும் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்... இன்று இரவு முதல் கனமழைக்கு வாய்ப்பு!
இன்று இரவு முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பத்திரமா இருங்க மக்களே. வங்கக் கடலில் நிலைக் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்துள்ள நிலையில் தமிழகத்தின் 9 துறைமுகங்களிலும் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகையில் இருந்து 880 கி.மீ. தூரத்திலும் சென்னையின் தெற்கு தென்கிழக்கே 1,050 கி.மீ தூரத்தில் உள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் இன்று இரவு முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும் எனவும் தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 29ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் முன்னெச்சரிக்கையாக சென்னை, கடலூர் நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால்,பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களிலும் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!