தமிழகம் முழுவதும் 1.23 லட்சம் மரக்கன்றுகள் நட்டு சாதனை!

 
தமிழகம் முழுவதும் 1.23 லட்சம் மரக்கன்றுகள் நட்டு சாதனை!

plants,plants1
தமிழகத்தில் நற்பணிகளை செய்து வரும் அறக்கட்டளைகளில் மிக முக்கியமானது ஈஷா அறக்கட்டளை. இதன் நிறுவனர் சத்குரு.இவரின் பிறந்த நாள் செப்டம்பர் 3ம் தேதி அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நாளை அவர்களின் இயக்கத்தை சார்ந்தவர்கள் ‘நதிகளுக்கு புத்துயிரூட்டும் தின’மாக கருதியும் தமிழகம் முழுவதும் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பாக விவசாயிகள் செப்டம்பர் 2, 3 ஆகிய இரு தினங்களில் 1.23 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் 1.23 லட்சம் மரக்கன்றுகள் நட்டு சாதனை!


இந்த மரக்கன்றுகள் அனைத்தும் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், அரியலூர், தர்மபுரி, சேலம், விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்களில் நடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து காவேரி கூக்குரல் இயக்கத்தின் தமிழ்நாடு மாநில கள ஒருங்கிணைப்பாளர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “காவேரி கூக்குரல் இயக்கம் சார்பாக தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகளுடன் இணைந்து, செப்டம்பர் 2,3 ம் தேதிகளில் 1.23 லட்சம் மரக்கன்றுகள் நடுவு செய்யப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் 1.23 லட்சம் மரக்கன்றுகள் நட்டு சாதனை!


இதில் விவசாயிகளுக்கு பணப்பயன் தரக்கூடிய, மண்ணுக்கேற்ற மரங்களான தேக்கு, வேங்கை, சந்தனம், செம்மரம், மலைவேம்பு, குமிழ் தேக்கு, கருமருது, மகாகனி போன்ற மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இதில் களப்பணியாற்றினர்.

மேலும் மரங்கள் மூலம் மண்ணின் வளத்தை மேம்படுத்தி ஆறுகளை உயிர்ப்பிக்கலாம். அதற்கான சிறு முயற்சி தான் இது. சத்குருவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் எனத் தெரிவித்துள்ளார்.சத்குருவின் பிறந்த நாளுக்கு மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், திரைத்துறையினர் மற்றும் பிரபலங்கள் எனப் பல்வேறு துறையை சார்ந்தவர்களும் சமூக வலைத்தளங்களில் தங்களின் வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளனர்.

From around the web