ரூ.26 லட்சம் மோசடி... அதிமுக நிர்வாகி மீது புகார்!
ரேஷன் கடையில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூபாய் 26 லட்சம் மோசடி செய்ததாக அதிமுக பிரமுகர் மீது புகாரளிக்கப்பட்டுள்ளது மதுரை அதிமுக தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் திருமுருகன்(58). இவர் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிமுக பிரமுகர் ராஜாராம் மீது ரூ.26 லட்சம் முறைகேடு புகார் அளித்தார். அந்த புகார் மனுவில், "மதுரையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நான் உதவியாளராக பணிபுரிகிறேன். மதுரையை சேர்ந்த ரஞ்சித், தமிழரசன், தினேஷ்குமார், சுபாஷ், முத்துகாமு, விஜயகுமார் (மாற்றுத்திறனாளி), கார்த்திக் ஆகியோரிடம் ரூ.26 லட்சம் வசூலித்து ரேஷன் கடை வேலைக்காக அதிமுக பிரமுகர் ராஜாராமிடம் கொடுத்தேன். அவர் வேலை வாங்கி கொடுக்கவில்லை. இது நாள் வரையில் வாங்கிய பணத்தையும் திரும்ப கொடுக்கவில்லை . இதற்கிடையில், மே 2021ல், ராஜாராமும் முருகானந்தமும் என்னுடன் தொலைபேசியில் பேசினார்கள்.
பழகாநந்தம் பகுதிக்கு வரச் சொல்லி என்னை தாக்கினர். அப்போது, ரேஷன் கடையில் 7 பேரை வேலைக்கு அமர்த்துவதற்காக ரூ.26 லட்சம் வாங்கினீர்கள், கொடுக்கவில்லை என்று கேட்டபோது, ரூ.20 பத்திரத்தில் கையெழுத்து போடு என்று மிரட்டினர். என்னை தாக்கிய ராஜாராம், ஆனந்த் என்கிற முருகானந்தம் மற்றும் நான்கு பேர் மீது நடவடிக்கை எடுத்து, எனது பணத்தை அவரிடம் இருந்து மீட்டுத்தர வேண்டும். எனக்கு பாதுகாப்பு வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அதிமுக பிரமுகர் ராஜாராமிடம் கேட்டபோது, ""வாடிப்பட்டி பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் உதவியாளராகப் பணிபுரியும் திருமுருகன். தன்னுடன் பணிபுரிபவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு கூடுதல் வட்டிக்குக் கொடுப்பது தான் இவரது வேலை. ஆனால், நான் ரூ. 2021ல் அவரிடமிருந்து 15 லட்சம் பணம் கடன் பெற்றேன். அதை திருப்பி கொடுத்து விட்டேன். தொடர்ந்து அதிக பணம் கேட்டு வந்ததால் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
போலீசார் அவரை வரவழைத்து விசாரித்தனர். பணம் மற்றும் பரிவர்த்தனை பிரச்னை தீர்ந்து, பணத்தை திரும்ப பெற்றுக் கொண்டதாக கடிதம் எழுதி கொடுத்துள்ளார்.
பழங்காந்தம் பகுதி வட்டச் செயலர், கட்சி உறுப்பினர் என்ற அடிப்படையில் முன்னாள் அமைச்சரை சந்தித்தேன். நான் அவருக்கு உதவியாளர் இல்லை. முன்னாள் அமைச்சருக்கு எதிரானவர்களின் தூண்டுதலின் பேரில் திருமுருகன் புகார் அளித்திருக்கலாம்" என்று கூறினார்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!