காவல்துறையினருக்கு டிமிக்கி.. கர்நாடகாவில் இருந்து கடத்தி வந்த குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல்!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் உட்கோட்ட பாச்சல் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது சந்தேகத்தின் பெயரில் மினிலாரி மடக்கி சோதனை செய்தனர். அப்போது மூட்டைகள் அடுக்கி இருந்ததை கண்டு வாகனத் தணிக்கை காவலர்கள் ஓட்டுனர் மற்றும் உடன் வந்தவரிடம் கேட்டபோது முன்னுக்கு பின்னான பதில் அளித்தனர். இதைதொடர்ந்து அடுக்கி வைக்கப்பட்ட மூட்டைகளை பிரித்து பார்த்தபோது அடுக்கி வைக்கப்பட்ட 21 மூட்டைகளும் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட் என்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்..
பின்னர் மினி லாரியுடன் பாச்சல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்ட போது கர்நாடகா மாநிலம் டும்கூர் பகுதியை சேர்ந்த கௌசிக் மற்றும் அவரது கூட்டாளியான ஆகாஷ் குமார் என்பதும், இருவரும் கூட்டாக கர்நாடகா மாநிலத்தில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்திற்கு எடுத்து வந்து வியாபாரம் செய்ய வந்தபோதுதான் தணிக்கை காவலர்களிடம் குட்காவுடன் பிடிபட்டனர் என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும் குட்கா கடத்தலில் ஈடுபட்ட இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து 21 மூட்டைகள் அடங்கிய 630 கிலோ குட்காவை பறிமுதல் செய்து கடைத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினி லாரியும் பறிமுதல் செய்து, இந்தக் கடத்தல் தொழில் எவ்வளவு நாட்களாக செய்து வருகின்றனர் என்றும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கர்நாடக மாநிலத்தில் இருந்து பல சோதனை சாவடிகளில் உள்ள காவலர்களுக்கு டிமிக்கி கொடுத்த விட்டு எடுத்து வந்த குட்கா போதை பொருளை பாச்சல் காவல்துறையினரால் நடத்தப்பட்ட வாகன தணிக்கையின் போது சிக்கிக் கொண்டது, காக்கா உட்கார பணம்பழம் விழுந்தது போல் உள்ளதாக இப்பகுதி சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!