உஷார் மக்களே... நாளை வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!

 
மக்களே கவனமா இருங்க!! மீண்டும்புதிய காற்றழுத்த தாழ்வு மையம்!

ஃபெங்கல் புயல் ஏற்படுத்திய பாதிப்பில் இருந்தே மக்கள் இன்னும் முழுமையாக மீளாத நிலையில், வங்கக்கடலில் மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில்  வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.

இதையடுத்து இன்றும் நாளையும்  தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

காற்றழுத்த தாழ்வு பகுதி

நாளை டிசம்பர் 7ம் தேதி சனிக்கிழமை  கடலோர மாவட்டங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  

இந்நிலையில் தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதிகளில் நாளை டிசம்பர் 7ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

புயல்

இதன்படி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, மேற்கு - வடமேற்கு திசையில் நகரக் கூடும் எனவும், டிசம்பர் 12ம் தேதி தென்மேற்கு வங்கக்கடலில் தமிழ்நாடு - இலங்கை கடலோர பகுதிகளை அடையக் கூடும் என  கணிக்கப்பட்டுள்ளது

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web