புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞானம் கூறும் விளக்கம் இதோ!

 
புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞானம் கூறும் விளக்கம் இதோ!


புரட்டாசி மாதங்களில் விஷ்ணு ஆலயங்கள் களை கட்டும். அனுதினமும் அசைவம் சாப்பிடுபவர்கள் கூட புரட்டாசி மாதம் முழுவதும் அசைவம் தவிர்த்து சனிக்கிழமைகளில் பெருமாள் தரிசனம் செய்வர். விஷ்ணுவுக்குரிய மாதம் அதனால் அசைவம் தவிர்க்க வேண்டும் என்பது ஆன்மிகத்தில் கூறப்படும் கருத்து.ஆனால் இந்துக்களின் வழிபாட்டு முறைகளில் அனைத்துமே மிகப்பெரிய அறிவியல் உண்மை ஒளித்து வைக்கப்பட்டிருப்பது உண்மை.

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞானம் கூறும் விளக்கம் இதோ!

அதன்படி வருடத்தின் எல்லா மாதங்களிலும் அசைவ உணவுகளைச் சாப்பிடுகிறோம். ஆனால், புரட்டாசியில் மட்டும் ஏன் தவிர்க்க வேண்டும்?புதன் சைவத்திற்குரிய கிரகம் ஆதலால் அசைவம் சாப்பிடக்கூடாது. அந்த மாதம் முழுவதும் பெருமாளை நினைத்து விரதமிருக்க வேண்டும் என்பது சாஸ்திரங்கள் கூறும் கருத்து.

சிவ ஆலயங்களில் வழிபடும் இந்துக்கள் கூட புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி, விரதம் இருந்து சனிக்கிழமைகளில் வீட்டில் தளிகை போடுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.
பொதுவாகவே புரட்டாசி மாதம் வெயிலும் காற்றும் குறைந்த மாதம். தமிழகத்தில் மழை தொடங்கும் காலம்.

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞானம் கூறும் விளக்கம் இதோ!

வெயிலால் இதுவரை வெம்மையாக இருந்த பூமி, மழைநீரை ஈர்த்து வெப்பத்தைக் குறைக்க தொடங்கும். இந்த சமயத்தில் இது ஆரோக்கிய கேடாய் அமையலாம். உடல் சூட்டைக் கிளப்பிவிடும். இது வெயில் கால வெப்பத்தைக் காட்டிலும் மிக மிக மோசமானது.இந்த நேரத்தில் அசைவம் சாப்பிட்டால் உடல் சூட்டை அதிகப்படுத்திப்படும். உடல் நலக்குறைபாடு ஏற்படலாம்.

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞானம் கூறும் விளக்கம் இதோ!

செரிமானக் கோளாறுகளும் ஏற்படலாம். திடீர் வெப்ப மாறுதல் நோய்கிருமிகளும் பெருகக் காரணமாகி விடலாம். தொடர் காய்ச்சல், இருமல், ஜலதோஷம் இவை ஏற்பட்டு விடும். பெருமாள் கோவில்களில் இந்த மாதத்தில் தரப்படும் துளசி தீர்த்தம் இவை அனைத்தையும் கட்டுப்படுத்தும் பேராற்றல் கொண்டது. இதற்காகவே, புரட்டாசியில் விரதம் இருந்து பெருமாள் கோயிலுக்கு செல்லும் வழக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

From around the web