ஒரே புடவைக்காக இரு பெண்கள் குடுமிபுடி சண்டை.. வைரலாகும் வீடியோ!

 
பெண்கள் குடுமிப்பிடி சண்டை

பெண்கள் இன்று இல்லாத துறைகளே இல்லை எனலாம். ஆனால் என்னதான் வளர்ச்சி இருந்தாலும் அவர்களின் நகை, புடவை ஆசைக்கு எப்போதும் அளவே கிடையாது என்பதை தான் அடிக்கடி நிரூபித்து கொண்டே இருக்கிறார்கள். எந்த ஊராக இருந்தாலும் இதற்கு விதிவிலக்கு இல்லை. குழாயடி சண்டை தொடங்கி நகைக்கடைகளில் பிடித்த டிசைன நான் தான் பர்ஸ்ட் செலக்ட் பண்ணேன் என்பது வரை இவை இன்னும், இன்னும் நீண்டு கொண்டே தான் போகிறது. இதே போல்  ஒரு சம்பவம் பெங்களூருவில் நடைபெற்று பெரும் வைரலாகி வருகிறது. 
கர்நாடக மாநிலம்  பெங்களூரு  மல்லேஷ்வரம் பகுதியில் மைசூர் சில்க்ஸ் என்ற பெயரில் ஜவுளி கடை ஒன்று செயல்பட்டு வருகிறது.


இந்த கடையில் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக பல்வேறு சலுகைகளை அதிரடி ஆபரில் அறிவிப்பது வாடிக்கை தான். இந்த சலுகை விலையில் மற்ற கடைகளை காட்டிலும் புடவைகள் குறைந்த விலைக்கு கிடைக்கும். ன பல யுக்திகளில் ஒன்றாக, அந்த கடையில் ஆண்டுதோறும் குறைந்த விலையில் புடவைகள் விற்கப்படுவது வழக்கம். இதற்காக பெண்கள் புடவை எடுக்க ஜவுளி கடையில் குவிந்து விட்டனர். அவர்களை வரிசைப்படுத்தி, கடை ஊழியர்களும் காவலர்களும் அனுப்பி கொண்டு இருந்தனர்.

அப்போது, திடீரென இரு பெண்களுக்கு இடையே புடவை எடுப்பதில் தகராறு ஏற்பட்டு உள்ளது. ஒருவர் தலைமுடியை பிடித்து இழுத்தும், அடித்தும் மற்றொரு பெண் தாக்குதலில் ஈடுபட்டார் அடிவாங்கிய அந்த பெண் பதிலுக்கு இந்த பெண்ணை துவைத்து எடுத்து விட்டார். அடி பொறுக்க முடியாமல் அந்த பெண் வலியில் அலறித் துடித்தும் விடவில்லை. இதனை பார்த்த கடை ஊழியர்களும் மற்ற வாடிக்கையாளர்களும் அவர்கள் இருவரையும் விடுவிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சேலை

சில  வாடிக்கையாளர்கள் நமக்கு எதற்கு வம்பு என ஓரமாக மொபைலில் வீடியோ எடுத்த படியே அச்சத்துடன் வேடிக்கை  பார்த்து கொண்டிருந்தனர்.  இந்த ரணகளத்திலும், தங்களுக்கு புடவை தான் முக்கியம் என்பது போன்று சிலர் கடையில் தேர்ந்தெடுத்து வைத்திருந்த புடவைகளை வேறு யாரும் எடுத்து விடாமல், அள்ளி வைத்துக் கொண்டிருந்தனர். மற்றும் சிலர் இந்த சண்டையை நகைச்சுவையாக எண்ணி, அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டிருந்தனர். 

இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பல ஷேர்களை பெற்ற இந்த வீடியோ குறித்து பல்வேறு விதமான கமெண்ட்கள் .   என்ன நடந்தால் எனக்கென்ன என்பது போல்  கவலைப்படாமல் புடவை எடுப்பதில் கவனத்துடன் இருக்கிறார்களே... அவர்களை ரொம்ப பிடித்திருக்கிறது என தெரிவித்து உள்ளனர். மற்றொருவர், இந்த நாட்டில்தான் நிலம், பணம் மற்றும் சேலைக்காக எல்லாம் சண்டை போடும் மக்களை கொண்டிருக்கிறோம் என பதிவிட்டுள்ளார். ஒருவர் சேலை என்பது வெறும் ஒரு துண்டு துணி அல்ல. அது உணர்ச்சி வாய்ந்தது எனவும் பதிவிட்டுள்ளார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web