கொரோனாவை அழிக்கும் மூன்றடுக்கு மாஸ்க்கை உருவாக்கிய பள்ளி மாணவி!

 
கொரோனாவை அழிக்கும் மூன்றடுக்கு மாஸ்க்கை உருவாக்கிய பள்ளி மாணவி!


இந்தியா முழுவதும் கொரொனா 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது.இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன . இருந்த போதிலும் பாதிப்புக்களும், உயிரிழப்புக்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் பூர்பா பர்தாமன் மாவட்டத்தை சேர்ந்த மாணவி திகாந்திகா.இவர் படிக்கும் போதே பல கருவிகளை கண்டறிந்தவர். இவர் இதுவரை 3முறை அப்துல்கலாம் விருது பெற்றவர். ஏற்கனவே, காதுகளை பாதிக்காத முகக்கவசம், முகத்தை பின்னால் திருப்பாமலேயே பின்னால் வருவதை பார்க்கும் கண்ணாடி ஆகியவற்றை உருவாக்கியவர்.

கொரோனாவை அழிக்கும் மூன்றடுக்கு மாஸ்க்கை உருவாக்கிய பள்ளி மாணவி!


அவர் தற்போது கொரோனா வைரஸை அழிக்கும் முகக்கவசத்தை உருவாக்கியுள்ளார். மாணவி திகாந்திகா கொரோனா வைரஸை கொல்லும் மூன்றடுக்கு மாஸ்க் ஒன்றை உருவாக்கியுள்ளார். இதன் மூலம் கொரோனா வைரஸை அழிக்க முடியும் என அவர் நிரூபித்துக் காட்டியுள்ளார்.
அந்த மாஸ்க்கின் முதல் அடுக்கில் தூசியை கட்டுப்படுத்தும் மின் காந்த அணுக்கள் உள்ளன. அதைத் தொடர்ந்து இரண்டாவது அடுக்கின் வழியே காற்று மூன்றாவது அடுக்கிற்கு செல்கிறது. அங்குள்ள சோப்பு கரைசல் கொரோனா வைரஸை அழித்து சுத்தமான காற்றை சுவாசிக்க வழி செய்கிறது.
இந்த மாஸ்க் அணிந்தால் நிச்சயம் கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம் என விளக்கம் அளித்துள்ளார். இவர் இந்த முகக்கவசத்தின் காப்புரிமைக்காக விண்ணப்பித்துள்ளார். மாணவிக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.

From around the web