அடுத்த சர்ச்சை... தேசிய கீதத்தை அவமானப்படுத்தினாரா மன்சூர் அலிகான்!?

 
திரிஷா - மன்சூர் அலிகான்

பட்ட காலிலேயே படும் என்பார்கள். சிலர் மைக்கைப் பார்த்தாலே பேட்டியளிக்கும் போது ஆவேசமாகி விடுகிறார்கள். அப்படி த்ரிஷா குறித்து, நடிகர் மன்சூர் அலிகான் பேசிய சர்ச்சை கடந்த இரு தினங்களாக கோலிவுட் முழுக்க வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில், தன்னிலை விளக்கம் தருவதற்காக இன்று சென்னையில் தனது வீட்டில் பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார் நடிகர் மன்சூர் அலிகான்.

அந்நிகழ்வின் துவக்கத்தில் தேசிய கீதத்தை மன்சூர் அலிகான் அவமதித்துள்ளதாக அடுத்த சர்ச்சை வெடித்துள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.


அது வரை, மன்னிப்பு கேட்க மாட்டேன், நடிகர் சங்கத்துக்கு எச்சரிக்கை என்று ஆவேசமாக பேசிக் கொண்டிருந்த நடிகர் மன்சூர் அலிகான், பத்திரிகையாளர்கள் சந்திப்பின் இறுதியில் தேசிய கீதத்தைப் பாடினார்.

த்ரிஷா

அப்போது, அவர் எழுந்து நின்று பாடினாலும், கையை உயர்த்தியபடியும் அங்கும் இங்கும் ஆடியபடியும் தேசிய கீதத்தைப் பாடினார். இதற்குதான் பத்திரிகையாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். தேசிய கீதத்தை அவமரியாதை செய்யும்படி நீங்கள் பாடி இருக்கிறீர்கள் என அவர்கள் கேள்வி எழுப்பியதும் மன்சூர் அலிகான் பத்திரிகையாளர்களிடம், ‘நான் எழுந்து நின்றுதான் பாடினேன். நீங்கள்தான் தப்பாக கேள்வி கேட்கிறீர்கள்’ என விவாதம் செய்து கொண்டிருக்க மன்சூர் அலிகானுக்கு ஜெயில் உறுதி என நெட்டிசன்கள் இந்த வீடியோவைப் பகிர்ந்து வருகின்றனர்.

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

From around the web