சுட்டெரிக்குது வெய்யில்... அடுப்பில்லாமல் ஆம்லெட் போட்டு காட்டிய இளைஞர்... வைரலாகும் வீடியோ!

 
ஆம்லெட்

நாடு முழுவதுமே பல மாநிலங்களிலும் வழக்கத்தை விட இம்முறை வெயில் மக்களை வதக்கி வருகிறது. இந்நிலையில், வதக்கும் வெய்யிலில் அடுப்பே இல்லாமல் ஆம்லெட் போட்டு, வேக வைத்து காட்டியிருக்கிறார் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. 

கொளுத்துது வெய்யிலுன்னு சொன்னா எல்லாம் பத்தாது.. நீங்களே பாருங்க.. எங்க ஏரியாவுல எந்தளவுக்கு வெயிலடிக்குதுன்னு என்கிற கதையாக தனது வீட்டின் மொட்டை மாடியில் அடுப்பு இல்லாமல் ஆம்லெட்டை சமைத்துள்ளார் இளைஞர் ஒருவர். குறிப்பிட்ட  இந்த வைரல் வீடியோ மொட்டை மாடியில் மொபைல் கேமரா மூலம் எடுக்கப்பட்டுள்ளது மற்றும் அந்த நேரத்தில் வானிலை எவ்வளவு சூடாக இருந்தது என்பதை வெளிப்படுத்த ஒரு பரிசோதனையை மேற்கொள்ளும் நபரின் ஸ்டோரியுடன் தொடங்குகிறது. 

மொட்டை மாடி கைப்பிடி சுவரில் ஒரு கடாயை வெயில் முழுவதும் நன்கு படுமாறு மொட்டை மாடியில் வைக்கிறார். பின்னர் கரண்டியால் முட்டையை உடைத்து அந்த panல் ஊற்றுகிறார். அதை ஆம்லெட் ஷேப்பில் கொண்டு வர pan முழுவதும் உடைத்த முட்டையை கைகளால் அசைத்து பரவ செய்கிறார்.

வெப்பம்

பின் சில நிமிடங்கள் வெயிலில் அப்படியே விட்டு விடுகிறார். சூரியனின் அதீத வெப்பம் காரணமாக எண்ணெய் அல்லது கேஸ் இல்லாமல் முட்டை ஆம்லெட்டாக மாறுவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. மேற்கு வங்கத்தில் கொளுத்தும் வெயில் காரணமாக அங்கு கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web