பெரும் சோகம்... டிக்டாக் பிரபலம் திடீர் மரணம்... அடுத்தடுத்து 4 முறை மாரடைப்பால் காலமானார்.. ரசிகர்கள் அதிர்ச்சி!
அடுத்தடுத்து நான்கு முறை மாரடைப்பால் டிக்-டாக் பிரபலம் திடீர் மரணமடைந்த சம்பவம் ரசிகர்களிடையே மிகுந்த சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
பிரேசிலைச் சேர்ந்த டிக்-டாக் பிரபலம் லுவானா ஆன்ட்ரே (29) உடல் அழகிற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அப்போது எதிர்பாரத விதமாக உயிரிழந்தார். Fitness freakஆன லுவானாவுக்கு கால் மூட்டில் அதிகப்படியான கொழுப்பு இருந்துள்ளது தெரிய வந்துள்ளது.
கால்களில் தேங்கியிருக்கும் கொழுப்பை அகற்றுவதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்த போதே 4 முறை அடுத்தடுத்து மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்தார். மாரடைப்பு வந்ததும், உடனடியாக சிகிச்சையை பாதியிலேயே நிறுத்தியும் லுவானாவை காப்பாற்ற முடியவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தி அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்காக ரொம்பவே மெனக்கெட்டு , அதற்கான அதிக சிரத்தையெடுத்துக் கொண்ட லுவானா, தன்னுடைய அழகையும் பராமரித்து வந்தார். இந்நிலையில், அழகை மேம்படுத்துவதற்காக அறுவை சிகிச்சை செய்ய சென்று உயிர் பறிபோன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!