உஷார் மக்களே... டெய்ரி மில்க் சாக்லேட்டில் புழுக்கள்.. ஷாக்கான காங்கிரஸ் பிரமுகர்
மகாராஷ்டிராவில் இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளராக இருப்பவர் அக்ஷய் ஜெயின். அவர் தனது சமூக ஊடகப் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, தான் வாங்கிய கேட்பரி டெய்ரி மில்க் சாக்லேட்டில் புழு போன்ற பூச்சி இருப்பதாக குற்றம் சாட்டினார். இது தனக்கு மிகவும் மோசமான அனுபவம் என்றும், பல வருடங்களாக கேட்பரி சாக்லேட் சாப்பிட்டு வருகிறேன் என்றும் கூறினார்.
Found a worm-like insect in my Cadbury Temptation Rum! I've been a loyal customer for years, but this is worst experience ever. Highly disappointed @CadburyWorld please address this! #Pune@DairyMilkIn @MDLZ @Cadbury5Star #chocolate #Cadbury #FoodSafety #Disappointed pic.twitter.com/lAm5ZQDUFA
— Akshay Jain (@AkshayJainIYC) September 19, 2024
புகாரை மறுக்காமல், கேட்பரி அவர்களின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கில் பதிலளித்துள்ளது. “உங்கள் மோசமான அனுபவத்திற்கு வருந்துகிறோம். உங்கள் புகாரை எழுத்துப்பூர்வமாக அனுப்பினால், உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கிறோம் என பதிலளித்தனர்.
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்திற்கு உள்ளானது. இந்த விஷயத்தில் கேட்பரியின் தரம் குறித்து பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ வைரலாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!