செப்.19ம் தேதி வரை டோல் கட்டணங்கள் ரத்து... விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு மாநில அரசு அறிவிப்பு!
விநாயகர் சதூர்த்தி விழாவை ஒட்டி மகாராஷ்டிரா அரசாங்கம் கொங்கன் வழித்தடங்களில் உள்ள சுங்கச் சாவடிகளை கடக்கும் வாகனங்கள் அதற்கான தொகையை செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு இன்று செப்டம்பர் 6ம் தேதி துவங்கி செப்டம்பர் 19ம் தேதி வரை அமலில் இருக்கும். இம்மாதம் 19-ம் தேதி வரை மகாராஷ்டிரா மாநிலத்தின் கொங்கன் வழித்தடத்தை கடக்கும் பயணிகள் சுங்க கட்டணம் மற்றும் சாலை வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. இது தொடர்பான அறிவிப்பை அம்மாநில பொதுப்பணி துறை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.
மும்பை - பெங்களூரு மற்றும் மும்பை - கோவா தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகனங்கள் இன்று செப்.6-ம் தேதி முதல் செப்டம்பர் 19-ம் தேதி வரை சுங்க கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. வாகனங்கள் சாலை வரி செலுத்துவதில் இருந்து விலக்கு பெறுவதற்கு ஆர்டிஓ அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து காவல் துறையிடம் இருந்து அனுமதி சீட்டை பெற வேண்டும். இதற்கான படிவத்தை அம்மாநில பொதுப்பணி துறை வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் விநாயக சதுர்த்தி விழாவை கொண்டாட மும்பை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கடலோர கொங்கன் பகுதியில் உள்ள தங்கள் சொந்த இடங்களுக்கு செல்கின்றனர். திருவிழாவை முன்னிட்டு மும்பையில் இருந்து மட்டும் கொங்கனுக்கு செல்லும் பயணிகளை பல அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ஏற்றி செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா