காதலை உதறியதால் ஆவேசம்... யாருக்குமே கிடைக்க கூடாது... காதலியின் கழுத்தை அறுத்து காதலன் வெறிச்செயல்!
என்னைத் திருமணம் செய்து கொள்ள மறுத்து, காதலை உதறியதால், இனி யாருக்குமே நீ கிடைக்காதே... என்று கத்தியப்படியே காதலி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துக் கொண்டிருக்க, சாவகாகசமாக காதலியின் கழுத்தை அறுத்து விட்டு, மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளார் காதலன். இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார், கொலைச் செய்த வாலிபரை கைது செய்துள்ளனர்.
கர்நாடகா மாநிலம், ஹோசஹள்ளியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் சுசித்ரா (20) முதலாமாண்டு படித்து வந்தார். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து வந்த சுசித்ராவின் தந்தை பெங்களூருவில், ஓட்டுநராகவும், அவரது தாயார், ஆடை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றிலும் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சுசித்ரா படித்து வந்த அதே பொறியியல் கல்லூரியில் படித்தவர் முன்னாள் மாணவரான தேஜாஸ்(23). இவர் சுசித்ராவை காதலித்து வந்துள்ளார். இருவரும் தனிமையில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர். இந்நிலையில், அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. தேஜாஸிடம், இந்த காதல் கைக்கூடாது என்றும், தன்னை மறந்துவிடுமாறும் சுசித்ரா கூறியதாக தெரிகிறது. இதனால் தங்களுக்குள் இருக்கும் பிரச்சினைகளைப் பற்றி பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்று கூறி, சுசித்ராவை நகரத்திலிருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குந்தி பெட்டா மலைக்கு தனது மோட்டார் சைக்கிளில் தேஜாஸ் நேற்று முன் தினம் அழைத்துச் சென்றார். அங்கு சென்ற பிறகு, இருவரும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. சுசித்ரா காதலைக் கைவிடுவதிலேயே உறுதியாக இருந்த நிலையில், மீண்டும் தகராறு முற்றியது.
இதனால் அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியால் சுசித்ரா கழுத்தை தேஜாஸ் அறுத்து விட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பினார். அப்பகுதியில் உள்ள சிலர். ரத்த வெள்ளத்தில் கிடந்த சுசித்ராவை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார், சுசித்ரா உடலை மீட்டதுடன், தேஜாஸை நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், தேஜாஸ், சுசித்ரா கடந்த 6 மாதங்களாக பழகியதுடன், காதலித்து வந்துள்ளனர். ஆனால், அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுசித்ராவுடன் தேஜாஸ் அடிக்கடி சண்டையிட்டுள்ளார். இதனால் அவரைப் பிரிய சுசித்ரா முடிவு செய்தார். அதையறிந்த தேஜாஸ், தன்னைக் காதலித்து விட்டு, தன்னுடன் தனிமையில் நெருக்கமாக இருந்து வந்த நிலையில், தன்னையும் ஏமாற்றி, இன்னொரு ஆணையும் ஏமாற்ற முடிவு செய்தாள். தனக்கு கிடைக்காதவள், வேறு யாருடனும் வாழக் கூடாது என்று சுசித்ராவை கழுத்தை அறுத்துக் கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் ஹாசன் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
சபரிமலைக்குச் செல்பவர்கள் தினந்தோறும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!