அடுத்த அதிர்ச்சி... 10ம் வகுப்பு மாணவி கூட்டு பலாத்காரம்: சாலையோரம் வீசி சென்ற கொடூரம்!

 
பாலியல் செக்ஸ் பலாத்காரம் கற்பழிப்பு பெண்

நாடு முழுவதும் சமீபமாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பாலியல் பலாத்காரங்கள் அதிகரித்து வரும் நிலையில், இக்குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் அதிகபட்சமாக இருக்க வேண்டும் என்றும், பெண்களுக்கு பள்ளிகளிலேயே பாதுகாப்பு இல்லை என்றும் பொதுமக்கள் அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர்.

கொல்கத்தாவில் மருத்துவ மாணவி பலாத்கார படுகொலை, தானேவில் பள்ளி மாணவர்கள் பலாத்காரம், கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் என்று அடுத்தடுத்து மொழி, மாநில பேதமில்லாமல் வக்ர மனநிலையுள்ள ஆண்கள் பெண்களுக்கு எதிராக வன்முறையைப் பயன்படுத்துகின்றனர்.

சிறுமிக்கு பாலியல் பலாத்காரம்

இந்நிலையில், அடுத்த அதிர்ச்சியாக அசாம் மாநிலம்  நாகோன் மாவட்டத்தில் நேற்று மாலை 14 வயதுடைய பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சாலையோரம் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

நாகோனில் 10 வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி, நேற்று மாலை ஒரு குளத்திற்கு அருகில் அரை மயக்க நிலையில் தனது சைக்கிளுடன் சாலையில் கிடந்துள்ளார். சுமார் ஒரு மணி நேரம் சாலையோரம் கிடந்த அவரை, அப்பகுதி மக்கள் மீட்டு காவல்துறைக்கு இது குறித்த தகவல் தெரிவித்தனர். சிறுமி பயிற்சி வகுப்பில் இருந்து வீட்டிற்கு திரும்பும் போது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து பேசிய உள்ளூர்வாசி ஒருவர், "சிறுமி சாலையோரம் சைக்கிளுடன் கீழே விழுந்து கிடந்தார். என்ன நடந்தது என்று விசாரித்தபோது, அவரால் சரியாக பேச முடியவில்லை. ஆனால் மூன்று இளைஞர்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக எங்களிடம் கூறினார்" என்று தெரிவித்தார். பாதிக்கப்பட்ட அந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை உறுதி செய்வதற்கான மருத்துவப் பரிசோதனையும் நடத்தப்பட்டுள்ளது.

மாணவி பலாத்காரம்!! ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்!! தமிழக ராணுவ வீரரின் வெறிச்செயல்!!

இந்த கொடூர சம்பவத்தை அடுத்து நாகோனில் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் போராட்டங்களைத் தொடங்கியுள்ளன. குற்றத்தில் ஈடுபட்ட மூன்று பேரையும் 12 மணி நேரத்திற்குள் போலீசார் பிடிக்க வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர். இச்சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் உள்ள கடைகள், சந்தைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதையொட்டி அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

From around the web