இன்று சட்டசபை கூடுகிறது... பெரும்பான்மையை நிரூபிப்பாரா அதிஷி!

 
அதிஷி கெஜ்ரிவால்

இன்றும், நாளையும் டெல்லி சட்டசபை கூடும் நிலையில் பெரும்பான்மையை நிரூபிப்பாரா முதல்வர் அதிஷி சிங் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மிக்கு அதிக எண்ணிக்கையிலான எம்.எல்.ஏ.க்கள் இருந்தாலும் அதிஷிக்கு மறைமுக எதிர்ப்பு இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

முன்னதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், அதிஷி சிங்கை புதிய முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் முன்மொழிந்திருந்தார். அதன் பின்னர் டெல்லி ஆம் ஆத்மி கட்சியினர் ஆலோசனைக் கூட்டத்தில் அனைவரும் அதிஷி சிங்குக்கு ஆதரவு தெரிவித்தனர். புதிய முதல்வராக அதிஷி சிங் தேர்வு செய்யப்பட்டு புதிய முதல்வராக பதவியேற்ற நிலையில், இன்று முதல் முறையாக சட்டசபை கூடுகிறது. 

கெஜ்ரிவால்

டெல்லியில் மொத்தம் 70 உறுப்பினர்கள் கொண்ட சட்டசபையில், முதலமைச்சர் உட்பட 7 அமைச்சர்கள் முழுபலத்துடன் இருப்பார்கள். இன்று செப்டம்பர் 26ம் தேதி சட்டசபை கூடுகிறது. இன்றும், நாளையும் கூடும் சட்டசபையில் பெரும்பான்மையை அதிஷி நிரூபிக்க வேண்டும்.

அதிஷி ஸ்வாதி மால்
இன்றும், நாளையும் சட்டசபை சிறப்புக்கூட்டம் நடைபெறும் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. தனது ஆட்சிக்கான பெரும்பான்மையை அதிஷி நிரூபிப்பார் என்றே எதிர்பார்க்கப்படும். தற்போது வரை டெல்லி சட்டசபையில் 61 இடங்களை ஆம் ஆத்மி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web