ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட சில முடிவுகள்

 
ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட சில முடிவுகள்

உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் 45 வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது.

  • புற்றுநோய் உள்ளிட்ட ஏழு உயிர்க் காக்கும் மருந்துகளுக்கான ஜி.எஸ்.டி 12% த்தில் இருந்து 5% மாக குறைப்பு.
  • உயிர்க் காக்கும் மருந்துகளான ஸோல்செல்ஸ்மா, வில்டெப்ஸோ ஆகிய இரண்டு மருந்து பொருட்களுக்கு ஜி.எஸ்.டி, வரியிலிருந்து முழுவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
  • ஏற்றுமதி பொருட்களுக்கான போக்குவரத்து கட்டணங்களுக்கு ஜி.எஸ்.டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • பயோ டீசலுக்கான ஜி.எஸ்.டி வரி 12 % இருந்து 5% மாக குறைப்பு.
  • யு.பி.எஸ் மற்றும் பேட்டரிகளுக்கான ஜி.எஸ்.டி வரி 18 % இருந்து 28 % மாக உயர்வு.
  • இரும்பு, அலுமினியம், காப்பர் உள்ளிட்ட உலோகத் தாதுப்பொருள்களுக்கான ஜி.எஸ்.டி வரி 5 % லிருந்து 18% மாக உயர்வு.
  • Zomoto, swiggy உள்ளிட்ட நிறுவனங்களுக்கு 5% ஜி.எஸ்.டி வரி விதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவர பல மாநில அரசுகள் எதிர்ப்பு
From around the web