13 வயசு மாணவியை கொடூரமாக தாக்கிய அத்தை.. வீடியோ எடுத்து தாய்க்கு அனுப்பி வைத்த கொடூரம்!
நாத்தனார் கொடுமை என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், தாயைக் கொடுமைப்படுத்துவதற்காக, மகளை கொடூரமாக தாக்கி, அதை அவரின் தாய்க்கு வீடியோவாக எடுத்து அனுப்பி அதிர வைத்திருக்கிறார் அத்தை. சமூக வலைத்தளங்களில் வெளியான இந்த வீடியோ கடும் கண்டனங்களைக் குவித்து வருகிறது. மத்திய பிரதேச மாநிலத்தில் சிறுமியை பெண் ஒருவர் கொடூரமாக தாக்கும் வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 13 வயது சிறுமியின் தாயும் தந்தையும் விவாகரத்து பெற்ற நிலையில் குழந்தை தனது தந்தையின் குடும்பத்துடன் தங்கியுள்ளது. இந்நிலையில் குழந்தையின் அத்தை பூஜா, சிறுமியை தனது சகோதரன் மகள் என்று கருதாமல் கடுமையாக துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
அந்த வீடியோவில், சிறுமியை தனது காலடியில் பிடித்து கொடூரமாக அடித்துள்ளார். வாலி தாங்காமல் என்னை விட்டு செல்லுமாறு சிறுமி கதறுகிறார். ஆனால், அதற்கு அடிபணியாத அத்தை அவளைக் கடுமையாகத் திட்டி உதைக்கிறாள். நான் எப்படி பதில் சொல்லுவேன் என்று அந்த பெண் என்னை அடிக்கிறாள். அந்த சிறுமி அழுது கொண்டே பாட்டியிடம் தன்னை அடிக்காதே என்று கூறுகிறாள். பின் தன் மகளை தன் பேத்தியை அடிக்காமல் இருக்குமாறு தடுக்கிறார்.
ஆனால், பூஜா அதைக் காதில் வாங்காமல் குழந்தையை தொடர்ந்து அடித்ததால், அதை வீடியோ எடுத்து சிறுமியின் தாயாருக்கு அனுப்பியுள்ளார். இதனையடுத்து சிறுமியின் தாயின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!