பகீர் வீடியோ... உயரமான கட்டிடத்தில் அறுந்த டிராலி... அந்தரத்தில் தொங்கிய பணியாளர்கள் !

 
அறுந்த டிராலி

 இந்தியா முழுவதும் கட்டுமானப் பணிகள் நடைபெறும் பகுதிகளில் கட்டுமானப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய  பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில்  சமீபத்தில் நடைபெற்ற அதிர்ச்சிகரமான சம்பவம், கட்டுமான பாதுகாப்பு குறித்து மீண்டும் ஒருமுறை கேள்வி எழுப்பியுள்ளது. நொய்டா செக்டார் 62-ல் உள்ள ஒரு உயரமான கட்டிடத்தில் கண்ணாடி சுத்தம் செய்யும் பணியில் இருவர் ஈடுபட்டிருந்தனர்.  

கட்டிடத்தின் வெளிப்புறத்தில் கண்ணாடி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் அதற்காக  பயன்படுத்தப்பட்ட டிராலியின் கயிறு திடீரென அறுந்து விழுந்தது. இதனால் பணியாளர்கள் அந்தரத்தில் தொங்கியபடி இருந்தனர்.   பாதுகாப்பு கயிறு கட்டப்பட்டிருந்ததால், அவர்கள் கீழே விழாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஆனால், அந்தரத்தில் தொங்கிய நிலையில்  அந்த நேரத்தில் பணியாளர்களின் அச்சம் மற்றும் பதற்றம்  சொல்லில் அடங்காதது. இச்சம்பவம் குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இது போன்ற திடீர் விபத்துக்கள், கட்டுமானத் துறையில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் எத்தனை முக்கியம் என்பதை மீண்டும் மீண்டும் உணர்த்துகின்றன.  

 

கட்டுமான காண்ட்டிராக்டர்கள் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இம்மாதிரியான சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன.   அதே நேரத்தில் கட்டுமான நிறுவனங்கள், தொழிலாளர்களுக்கு போதுமான பயிற்சி அளித்து, பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வைப்பது அவசியம். அரசு நிறுவனங்களும், கட்டுமான தளங்களில் பாதுகாப்பு ஆய்வுகளை மேற்கொண்டு, விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web