கனமழையால் சோகம்... வெள்ளத்தில் சிக்கி இளம்பெண் விஞ்ஞானி மரணம்!
ICAR என்றழைக்கப்படும் இந்திய வேளாண் ஆய்வு கவுன்சிலில் பணிபுரிந்து வந்தவர் இளம் விஞ்ஞானி அஸ்வினி. அஸ்வினியும் அவரது தந்தையும் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற உள்ள மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஹைதராபாத் விமான நிலையத்திற்கு காரில் சென்றுக் கொண்டிருந்தனர்.
அப்போது மஹபூபாபாத் மாவட்டம் புருஷோத்தமய குடேமில் உள்ள அகுரு ஓடையின் பாலத்தில் இவர்களது கார் சென்றுக் கொண்டிருந்த போது வெள்ளத்தில் கார் அடித்துச் செல்லப்பட்டது. அந்த இறுதி நேரத்தில் அஸ்வினியும் அவரது தந்தையும் உறவினர்களை தொலைபேசியில் அழைத்து, தங்களது காரில் தண்ணீர் நிறைந்து வருவதாகவும், தங்களால் காரில் இருந்து வெளியே வரமுடியாத படி இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
இதன் பின்னர் தான் இவர்கள் காரில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட விவரம் தெரிய வந்து, இவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. அந்த பகுதியில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் அஸ்வினியின் உடல் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அஸ்வினியின் தந்தையைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா