வங்காள விரிகுடாவில் உருவாகி வரும் சூறாவளி புயலுக்கான தயார்நிலையை ஆய்வு செய்ய என்சிஎம்சி கூட்டம் நடைபெற்றது

வங்காள விரிகுடாவில் உருவாகி வரும் சூறாவளி புயலுக்கான தயார்நிலையை ஆய்வு செய்ய என்சிஎம்சி கூட்டம் நடைபெற்றது

அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா தலைமையில் நேற்று நடைபெற்ற தேசிய நெருக்கடி மேலாண்மை குழுவின் (என்சிஎம்சி) கூட்டத்தில், வங்காள விரிகுடாவில் உருவாகும் சூறாவளி புயலால் ஏற்படும் சூழ்நிலையை சமாளிக்க மத்திய அமைச்சகங்கள் /முகமைகள் மற்றும் மாநில அரசுகளின் தயார்நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

வங்காள விரிகுடாவில் உருவாகி வரும் சூறாவளி புயலுக்கான தயார்நிலையை ஆய்வு செய்ய என்சிஎம்சி கூட்டம் நடைபெற்றது

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையின் தற்போதைய நிலை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (ஐஎம்டி) தலைமை இயக்குநர் விளக்கினார், சூறாவளி புயலாக இது உருவாக வாய்ப்புள்ள நிலையில், செப்டம்பர் 26 மாலைக்குள் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரைகளை இது கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, காற்றின் வேகம் மணிக்கு 75-85 கி.மீ-ல் இருந்து 95 கி.மீ வரை இருக்கும்.

வங்காள விரிகுடாவில் உருவாகி வரும் சூறாவளி புயலுக்கான தயார்நிலையை ஆய்வு செய்ய என்சிஎம்சி கூட்டம் நடைபெற்றது

மாநிலங்களின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். ஆந்திராவில் உள்ள ஸ்ரீகாகுளம், விஜயநகரம் மற்றும் விசாகப்பட்டினம் மற்றும் ஒடிசாவில் கஞ்சம் மற்றும் கஜபதி ஆகிய மாவட்டங்களை இது பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

இந்த மாநிலங்களில் தேசிய பேரிடர் மீட்பு படை 18 குழுக்களை நியமித்துள்ளது மேலும் கூடுதல் அணிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ராணுவம் மற்றும் கடற்படையின் மீட்பு மற்றும் நிவாரண குழுக்களுடன் கப்பல்கள் மற்றும் விமானங்களும் அனுப்பப்பட்டுள்ளன.

வங்காள விரிகுடாவில் உருவாகி வரும் சூறாவளி புயலுக்கான தயார்நிலையை ஆய்வு செய்ய என்சிஎம்சி கூட்டம் நடைபெற்றது

மாநிலங்கள் மற்றும் மத்திய முகமைகளின் ஆயத்த நடவடிக்கைகளை ஆய்வு செய்த ராஜீவ் கவுபா, மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசின் முகமைகள் அனைத்து தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். உயிர்ச்சேதத்தை முற்றிலும் தடுத்தல் மற்றும் சொத்து மற்றும் உள்கட்டமைப்பு சேதத்தை குறைத்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். அனைத்து மத்திய முகமைகளும் உதவ தயாராக உள்ளன என்று மாநில அரசுகளுக்கு அமைச்சரவை செயலாளர் உறுதியளித்தார்.

From around the web