30 வயசு தான்... அதிவேகத்தைக் கண்டித்ததால் காரை ஏற்றி போலீஸ்காரர் கொலை!

 
சந்தீப்

டெல்லியில் சாலையில் அதிவேகமாக காரை ஓட்டிச் சென்றதைக் கண்டித்த போலீஸ்காரரை, கார் ஏற்றிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி காவல்துறையில் பணியாற்றி வந்தவர் சந்தீப்(30). இளம் போலீசாரான இரவு நேரத்தில் சாதாரண உடையில் பைக்கில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.  அவர் ரோந்து சென்ற சாலையில் இடதுபுறம் திரும்ப முயன்ற போது, அதிவேகமாக கார் ஒன்று அந்த பகுதியில் வந்துள்ளது. இதனைக் கண்ட உஷாரான சந்தீப், காரை மெதுவாக ஓட்டிச் செல்லுமாறு கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

சந்தீப்

இதில் கடுப்பானவர்கள் சந்தீப்பின் பைக்கின் பின்புறத்தில் காரை வேகமாக ஓட்டிச் சென்று பயங்கரமாக மோதி இடித்தனர்.  அதன்பின்னர் சுமார் 10 மீட்டர் தூரத்திற்கு சந்தீப் காரோடு இழுத்துச் செல்லப்பட்டார். அதன் பின்னர் அங்கிருந்து காரை ஓட்டி தப்பிச் சென்றனர்.

இதில் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்து முதலுதவி அளித்துவிட்டு, பிறகு, மேல்சிகிச்சைக்காக வேறொரு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சந்தீப் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக அறிவித்தனர்.

குடிபோதையால் நிகழ்ந்த மரணம் !

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, விபத்தை ஏற்படுத்திய காரை அடையாளம் கண்டு, பறிமுதல் செய்தனர். இதில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தலைமறைவான 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web