கனமழை... குஜராத் வெள்ளத்தில் 17,800 பேர் மீட்பு; 28 பேர் பலி!

 
குஜராத் கனமழை

குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் அம்மாநிலத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்த வெள்ளத்தில் சிக்கி இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  குஜராத் மாநில அரசின் தரவுகளின்படி, குஜராத்தில் ஆண்டு சராசரி மழையில் 105 சதவீதம் கடந்த சில நாட்களில் மட்டும் பெய்துள்ளது.

மாநிலத்தில் அதிக மழைப்பற்றாக்குறையை பதிவு செய்த 33 மாவட்டங்களில் இந்த சில நாட்களில் சராசரி மழையில் 73 சதவீதம் பெய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மாநில அரசின் கூற்றுப்படி, சவுராஷ்டிரா பிராந்தியத்தின் முக்கிய பகுதிகளான தேவபூமி துவாரகா, ஜாம்நகர், போர்பந்தர் மற்றும் ராஜ்கோட் ஆகிய பகுதிகளில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை முதல் நேற்று (புதன்கிழமை) காலை 6 மணி வரை கனமழை பெய்தது. மேலும் குஜராத்தில் 13 தாலுகாக்களில் 200 மி.மீ மழையும், 39 இடங்களில் 100 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

இன்று பெய்த கனமழை சற்று குறைந்துள்ளதால், விஸ்வாமித்ரி ஆற்றின் நீர்மட்டம் இன்றைய நிலவரப்படி 37 அடியில் இருந்து 32 அடியாக குறைந்துள்ளது. மேலும் பல்வேறு பகுதிகளில் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதனால் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2 நாட்களில் மட்டும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் 95 பேரை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்டுள்ளனர். மொத்தத்தில், வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து சுமார் 17,800 பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றான வதோதராவில் மட்டும் 12,000 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

From around the web