கடந்த 70 ஆண்டுகளாக நடைபெற்றதைவிட வெறும் இரண்டே ஆண்டுகளில் மிக பெரிய சாதனை

 
கடந்த 70 ஆண்டுகளாக நடைபெற்றதைவிட வெறும் இரண்டே ஆண்டுகளில் மிக பெரிய சாதனை

பிரதமர் நரேந்திர மோடி கிராம பஞ்சாயத்துகள் மற்றும் குடிநீர் சமிதிகள் / கிராம குடிநீர் மற்றும் தூய்மையாக்கல் குழுக்கள் (VWSC) ஆகியவற்றுடன் ஜல் ஜீவன் இயக்கம் குறித்து காணொலி கருத்தரங்கு வழியாக கலந்துரையாடினார்.

இயக்கத்தில் பங்கேற்றுள்ள அனைத்து தரப்பினருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் இந்த இயக்கத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமையை அதிகரிக்கவும் ஜல் ஜீவன் இயக்க செயலியை தொடங்கி வைத்தார்.

கடந்த 70 ஆண்டுகளாக நடைபெற்றதைவிட வெறும் இரண்டே ஆண்டுகளில் மிக பெரிய சாதனை

மேலும் அவர் தேசிய ஜல் ஜீவன் நிதியத்தையும் தொடங்கி வைத்தார். ஒவ்வொரு கிராம வீடுகள், பள்ளிக்கூடங்கள், அங்கன்வாடி மையங்கள், ஆஸ்ரமங்கள் மற்றும் ஏனைய அரசு நிலையங்கள் ஆகியவற்றுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்க உதவி செய்யும் வகையில் இந்தியாவில் இருக்கும் அல்லது வெளிநாட்டில் இருக்கும் எந்த ஒரு தனிநபர், நிறுவனம், கார்ப்பரேஷன் அல்லது தயாள குணம் கொண்டோர் இந்த நிதியத்திற்கு நன்கொடை வழங்கலாம்.

கடந்த 70 ஆண்டுகளாக நடைபெற்றதைவிட வெறும் இரண்டே ஆண்டுகளில் மிக பெரிய சாதனை

கிராம பஞ்சாயத்துகள் மற்றும் குடிநீர் சமிதிகளின் உறுப்பினர்களுடன் மத்திய அமைச்சர்கள் கஜேந்திர சிங் ஷெகாவத், பிரகலாத் சிங் படேல், பிஷ்வேஸ்வர் துடு மற்றும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டின் வெள்ளேரியைச் சேர்ந்த திருமதி சுதாவிடம் ஜல் ஜீவன் இயக்கத்தின் பலன்கள் குறித்து பிரதமர் விசாரித்தார். இயக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டப் பிறகு அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு அளிக்கப்பட்டுள்ளதாக திருமதி சுதா தெரிவித்தார்.

அவரது கிராமத்தில் தயாரிக்கப்படும் உலகப் புகழ் பெற்ற ஆரணி பட்டு புடவை குறித்தும் பிரதமர் விசாரித்தார். குழாய் வழியாக குடிநீர் கிடைப்பதால் நேரம் மிச்சமாகிறதா என்றும் பிற வீட்டு வேலைகளுக்கு கூடுதல் நேரம் கிடைக்கிறதா என்றும் பிரதமர் விசாரித்தார்.

குடிநீர் கிடைப்பது தங்களது வாழ்க்கைத் தரத்தை அதிகரித்து இருப்பதாகவும் உற்பத்தி சார்ந்த பிற நடவடிக்கைகளுக்கு நேரம் கிடைப்பதாகவும் திருமதி சுதா கூறினார். தடுப்பணை கட்டுதல், குளங்கள் வெட்டுதல் போன்ற மழைநீர் சேமிப்புக்காக தனது கிராமம் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் அவர் பகிர்ந்து கொண்டார். குடிநீர் இயக்கத்தை மக்கள் ஏற்றுக் கொண்டது என்பது மகளிருக்கு அதிகாரம் அளிக்கும் திசையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மிகப் பெரும் படிகல்லாகும் என்று பிரதமர் தெரிவித்தார்.

From around the web