15 ஆண்டுகளுக்கு பிறகு.. தொழிலாளிக்கு கிடைத்த 37.07 லட்சம்

 
15 ஆண்டுகளுக்கு பிறகு.. தொழிலாளிக்கு கிடைத்த 37.07 லட்சம்

மத்திய பிரதேச மாநில அரசு விவசாயத்தை மேம்படுத்தவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவும் அதிரடி திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி உள்ளூர் விவசாயிகளுக்கு அம்மாநில அரசு நிலங்களை குத்தகைக்கு கொடுக்க சம்மதித்துள்ளது. அதன்படி கொடுக்கப்பட்ட நிலங்களில் விவசாயம் செய்து லாபம் பெறலாம் ஆனால் அங்கு பூமிக்கடியில் கிடைக்கும் அனைத்து பொருட்களையும் அரசிடம் ஒப்படைத்து விட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி குத்தகைக்கு விடப்பட்ட நிலத்தில் வைரம் கிடைத்தால் மாவட்ட சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை ஏலம் விட்டு கிடைக்கும் தொகையில் அரசுக்கு சேரவேண்டிய கட்டணம், வரி போக மீதத் தொகையை வைரத்தை எடுத்த நபரிடம் கொடுப்பார்.

15 ஆண்டுகளுக்கு பிறகு.. தொழிலாளிக்கு கிடைத்த 37.07 லட்சம்

ரத்தன்லால் பிரஜாபதி என்ற தொழிலாளி பன்னா மாவட்டத்தில் உள்ள ஹிராபூர் தபரியான் பகுதியில் குத்தகை நிலத்திலிருந்து 8.22 கேரட் மதிப்புள்ள ஒரு வைரத்தை சமீபத்தில் தோண்டியெடுத்தார். இந்த வைரம் செப்டம்பர் 21 அன்று ஏலம் விடப்பட்டதில் பிரஜாபதிக்கு ரூ.37.07 லட்சம் கிடைத்தது.

15 ஆண்டுகளுக்கு பிறகு.. தொழிலாளிக்கு கிடைத்த 37.07 லட்சம்

இதுகுறித்து கூறிய ரத்தன்லால் பிரஜாபதி பங்குதாரர் “நாங்கள் கடந்த 15 ஆண்டுகளாக பல்வேறு பகுதிகளில் சிறிய சுரங்கங்களை குத்தகைக்கு எடுத்தோம், ஆனால் எந்த வைரமும் கிடைக்கவில்லை. இந்த ஆண்டு, நாங்கள் கடந்த ஆறு மாதங்களாக ஹிராபூர் தபரியான் என்ற இடத்தில் குத்தகைக்கு எடுத்தோம், 8.22 காரட் எடையுள்ள வைரத்தைக் கண்டு மகிழ்ச்சியடைந்தோம்.”

இந்த வைரத்தையும் சேர்த்து மொத்தம் 61 வைரங்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஏலம் விடப்பட்டதின் மொத்தம் ரூ.1 கோடியே 27 லட்சத்து 71 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

From around the web