நடிகை அமலாபால் 2வது திருமணம் செய்துக் கொண்டார்... புகைப்படத்தை வெளியிட்டு அறிவிப்பு!

 
அமலாபால்

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது என்பதை காலங்காலமாக காலங்களை நிரூபித்துக் கொண்டிருக்கின்றன. பணம், பதவி, புகழ் எல்லாம் சந்தோஷமான திருமண வாழ்க்கையை தீர்மானிக்க முடியாது. பல சமயங்களில் இந்த பணமும், புகழுமே திருமண வாழ்க்கையில் அஸ்திவாரத்தை ஆட்டம் காண செய்கிறது. ரஜினியிடம் இல்லாத பணமா, புகழா... இத்தனை  சம்பாதித்தும் வாழ்க்கையில் நிம்மதி இல்லை என்று மனம் விட்டு பொதுமேடையில் பேசும் அளவுக்கு இருக்கிறார் சூப்பர் ஸ்டார். இரண்டு பெண்களுமே விவாகரத்துக்கு மல்லுக்கட்டியவர்கள். இதில் யார் பக்கம் நியாயம் என்று மூன்றாவது மனிதர்களான நாம் சொல்லக் கூடாது. தனுஷைப் பற்றியும் வராத வதந்திகளா?

நடிகை அமலா பால், இயக்குநர் ஏ.எல். விஜய்யுடனான விவாகரத்துக்குப் பிறகு, தன்னுடைய நீண்ட நாள் நண்பரும், இந்நாள் காதலருமான ஜகத் தேசாயை இன்று திருமணம் செய்து கொண்டார்.   அமலா பாலின் பிறந்தநாள் அன்று அவரது காதலர் ஜகத் தேசாய் அமலா பாலுக்கு ப்ரொபோஸ் செய்திருந்தார். இந்நிலையில், தற்போது இருவருக்கும் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளதாகவும் இது இது குறித்த  புகைப்படங்களை ஜகத் தேசாய் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அமலா பால்   ரசிகர்கள்  வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் சமூக வலைதளங்களில்  தெரிவித்து வருகின்றனர்.  இருவரது திருமண பந்தம் குறித்து அமலா பால் கணவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவில் “இரண்டு ஆத்மாக்கள், ஒரு விதி, என் தெய்வீகமான  பெண்ணுடன் கைகோர்த்து இந்த வாழ்நாள் முழுவதும் நடக்கப்போகிறேன்” என  நெகிழ்ச்சி செய்தியை  பகிர்ந்துள்ளார்.இந்த திருமணம்  கொச்சியில் இருவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள்   சூழ  நடைபெற்று முடிந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை அமலா பால் இரண்டாவது திருமணம் குறித்தான கேள்விகளுக்கு, ‘திருமணம் செய்வதில் வெறுப்பு இல்லை. சரியான நபரை சந்தித்து திருமணம், குழந்தைகள் என செட்டில் ஆக எனக்கும் ஆசை’ எனத் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் இன்று தனது 32வது பிறந்தநாளில் அமலாபால் தனது காதலர் ஜெகத் தேசாயுடன் திருமணத்தை அறிவித்துள்ளார்.  இந்நிலையில் கஃபே ஒன்றில் அமலாபால் முன்பு நடனம் ஆடி மோதிரத்துடன் தன் திருமணத்தைத் தெரிவிக்க அமலாபால் அதற்கு தன் காதலருக்கு உதட்டு முத்தமிட்டு சம்மதம் தெரிவித்துள்ளார். ‘என் ஜிப்ஸி கேர்ள் திருமணத்திற்கு சம்மதித்து விட்டாள். பிறந்தநாள் வாழ்த்துகள் அன்பே!’ என ஜெகத் கூறியுள்ளார். அமலாபாலின் புதிய தொடக்கத்திற்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அமலாபால்

’சிந்து சமவெளி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை அமலாபால் ‘மைனா’ படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்தார். அதன்பிறகு, ‘தலைவா’, ’தெய்வத்திருமகள்’, ‘ராட்சசன்’ உள்ளிட்டப் பல படங்களில் நடித்தார். இவருக்கும் இயக்குநர் விஜய்க்கும் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் ஆனபோது அமலாபாலுக்கு 23 வயது. இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்தனர்.

இனிதே நடந்தது இயக்குநர் விஜய் - அமலாபால் நிச்சயதார்த்தம்... 12ம் தேதி  சென்னையில் திருமணம் | Amala Paul-Vijay Engagement Photos - Tamil Filmibeat

இந்த நிலையில், விஜய், ஐஸ்வர்யா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை உள்ளது. விவாகரத்துக்குப் பிறகு படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்ட அமலாபால், தயாரிப்பில் கவனம் செலுத்தினார். இதுமட்டுமல்லாது இமயமலை, காடுகள் என அதிக பயணம் மேற்கொண்ட அமலா தான் ஒரு நாடோடி வாழ்க்கையை விரும்புவதாகவும் ஆன்மிகத்தில் அதிக நாட்டம் வந்துள்ளது எனவும் பேட்டிகளில் தெரிவித்தார்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web