கல்லூரி மாணவர்களுக்குள் மோதல்…!! “நீங்க போட்ட உயிர் பிச்சையில வாழ விரும்பல…” உருக்கமாக பேசி ரயில் முன்பு பாய்ந்த மாணவர்!!

கல்லூரி மாணவர்களுக்குள் மோதல்…!! “நீங்க போட்ட உயிர் பிச்சையில வாழ விரும்பல…” உருக்கமாக பேசி ரயில் முன்பு பாய்ந்த மாணவர்!!

சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுடன் ஏற்பட்ட மோதலில் மாநிலக் கல்லூரி மாணவர், ஆவேசமாக வாட்ஸ் ஆப்பில் வாய்ஸ் நோட் போட்டு விட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் குமார். சென்னை மாநிலக் கல்லூரியில் எம்.ஏ., வரலாறு படித்து வந்த மாணவர் குமார், வழக்கம் போல கல்லூரிக்கு சென்று விட்டு புறநகர் ரயிலில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

கல்லூரி மாணவர்களுக்குள் மோதல்…!! “நீங்க போட்ட உயிர் பிச்சையில வாழ விரும்பல…” உருக்கமாக பேசி ரயில் முன்பு பாய்ந்த மாணவர்!!

ரயில் திருநின்றவூர் வந்த போது பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சிலர் குமாரை இழுத்துச் சென்று நவீன் என்கிற வேறொரு மாணவருடன் வைத்து கிண்டல் அடிக்க துவங்கினர். ஆனால் நவீன் வேறொரு ரயில் வந்தவுடன், அதில் ஏறி சென்று விட்டார்.

அந்த மாணவர்களிடம் குமார் மட்டும் தனியா மாட்டிக் கொண்டார். அப்போது குமார் சக மாணவர்களுக்கு ஆடியோ ஒன்றை அனுப்பி விட்டு மாற்று மார்கத்தில் வந்த ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவர் அனுப்பிய ஆடியோவில் “பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போட்ட பிச்சையில் நான் வாழ விருப்பமில்லை” என குமார் கூறியுள்ளார்.

கல்லூரி மாணவர்களுக்குள் மோதல்…!! “நீங்க போட்ட உயிர் பிச்சையில வாழ விரும்பல…” உருக்கமாக பேசி ரயில் முன்பு பாய்ந்த மாணவர்!!

இதுகுறித்து முறையாக விசாரணை நடத்த வேண்டும் என கூறி மாநில கல்லூரி மாணவர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினார். இதனால் அங்கு 20க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். பிறகு போலீசார் சமாதானப்படுத்தி மாணவர்களை அனுப்பி வைத்தனர்.

From around the web