வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்! நோய்கள் பரவும் அபாயம்!

 
வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!  நோய்கள் பரவும் அபாயம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் விடிய விடிய கொட்டித்தீர்த்த மழை காரணமாக ஏராளமான இடங்களில் வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் தமிழகத்தின் தென்மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!  நோய்கள் பரவும் அபாயம்!

அந்த வகையில் தூத்துக்குடியில் கடந்த 2 நாட்களாக விடிய விடிய கனகொட்டித் தீர்த்து வருகிறது.
குறிப்பாக பிரையண்ட் நகர் 1 முதல் 5 ம் தெரு வரையிலான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!  நோய்கள் பரவும் அபாயம்!


இதனால் அங்குள்ள மக்கள் வெளியே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். தண்ணீரை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் அவர்களது இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. நீர் தேங்கியுள்ளதால் கொசுக்கள் அதிகரித்து டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விரைவில் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தங்களை காக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

From around the web