23 வயசு தான்... தூத்துக்குடி தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிந்து தீ விபத்து... துடிதுடித்து உயிரிழந்த ஜோயல்!
தூத்துக்குடி முத்தையாபுரம் ஹார்பர் எக்ஸ்பிரஸ் ரோட்டில் டாக் (தூத்துக்குடி அல்கலி கெமிக்கல்ஸ் & ஃபெர்டிலைஷர்ஸ் லிமிடெட்) தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் டாக்காம் என்ற நிறுவனத்தின் ஒப்பந்ததாரான ஜோயல் என்பவரிடம் மஞ்சநீர்காயல் வடக்கு தெருவைச் சேர்ந்த ஆனந்த கிருஷ்ணன் மகன் ஹரிகரன் (23) என்பவர் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று பிற்பகல் 3 மணியளவில் அமோனியா பிளான்டில் பைப்லைன் கசிவை சரி செய்யும் போது அடைப்பதற்கு பதிலாக திறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் தீக்காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், அங்கு பணியில் இருந்த தூத்துக்குடி காட்டன் ரோட்டைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் தனராஜ் (37), திருப்பூர் சந்தரசேகர் மகன் மாரிமுத்து (24) ஆகியோர் தூத்துக்குடி ஏவிஎம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் குறித்து முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். சம்பவ இடத்தை டவுண் ஏஎஸ்பி கேல்கர் சுப்ரமண்ய பால்ச்சந்திரா நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். அமோனியா வாயு கசிவால் தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியர் உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா