5 மாத கர்ப்பிணி!! கழுத்தை நெரித்து மாடியிலிருந்து தள்ளிய கணவன்!! அதிர்ந்த போலீசார்!!

மாடியிலிருந்து 5 மாத கர்ப்பிணி பெண் கீழே விழுந்து உயிரிழந்த விவகாரத்தில், பெண்ணின் கணவரே மனைவியை கீழே தள்ளி விட்டு கொலை செய்த விபரம் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் வசித்து வருபவர் கணபதி ராஜா (27). இவருடைய மனைவி நாகலட்சுமி (24) 5 மாதம் கர்ப்பிணியாக இருந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாடிக்கு சென்ற நாகலட்சுமி தவறி விழுந்து இறந்து போனதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது நாகலட்சுமியின் சகோதரர் வைரம் தங்கையின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி போலீஸில் புகார் அளித்தார். அதை தொடர்ந்து கணவர் கணபதிராஜாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது குடும்பப் பிரச்னை காரணமாக மாடியில் மனைவியை கழுத்தை நெறித்துக் கொன்று கொலை செய்து விட்டு, மாடியில் இருந்து கீழே தூக்கிப் போட்டதாக கூறி கணபதிராஜா நாடகமாடியதை ஒப்புக் கொண்டர். இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் கணபதிராஜாவை கைது செய்தனர்.